Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 23 June 2011

SPEED UP STRIKE ACTIVITIES - GEAR UP MEETINGS- VISIT ALL OFFICES


போர் முரசு கொட்டட்டும் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் !
அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே/ சங்க மறவர்களே !

இன்னும் 11  நாட்களே  உள்ளன !  ஆம் ! தினம் ஒரு நாள்... கணக்கில்
குறையும் ! நெருங்கி வருகிறது  ஜூலை 5  ஆம் நாள் ! காலவரையற்ற
வேலை நிறுத்தம் துவங்கும் நாள் !

அஞ்சலக மூடல் !  RMS  ஒழிப்பு !  ஸ்பீட் போஸ்ட் , REGISTERED  போஸ்ட்
ஹப் சென்டர் , GDS  ஊழியர்  ENGANGEMENT  RULES ,  மெக்கென்சி  அந்நிய 
நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்  அஞ்சல் துறை ,  ACCENTURE  இன் கீழ் 
அஞ்சலக கணினி ! எங்கு போகிறது அஞ்சல் துறை ?

முந்தைய  தொலைத் தொடர்புத்துறை  BSNL  ஆகி  மூடு விழா நோக்கி 
முன்னேறுவதைப் பார்த்த பின்னுமா   தயக்கம் !   இன்றில்லையேல் 
என்றுமில்லை !   அஞ்சல் துறை அரசுத் துறையாக இருக்குமா ?
தனியார் துறையாய்  மாறுமா ?  மக்கள் சேவை இருக்குமா ?
அஞ்சல் துறை மானம் காக்கப்படுமா ?  எல்லாம்  மறந்து மண்ணாகப்
போகுமா ?

" எரிமலை எப்படிப் பொறுக்கும்  ?  நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ?
சிங்கக் கூட்டம் எழுந்தால் -  துன்ப விலங்குகள் தெறிக்கும் !"

கவிஞனின் வைர வரிகள் மறந்தே போகுமா ?

" மறக்காது ! இது மறவர் பூமி !  வெங்கொடுமை சாக்காட்டில்
செங்குருதி சிந்தியது  எங்கள் NFPE !"  என்ற பதில் உன்னிடமிருந்து
கிடைக்குமா ?   கிடைக்கும் என்கிறது   நம்  வரலாறு ! 
வெல்லும் என்கிறது நம் பதிவேடு !

அனைத்து உறுப்பினரையும்  நேரில் சந்திப்போம் !
அனைத்து  அலுவலகங்களுக்கும் நேரில் செல்வோம் !
கோரிக்கை அடங்கிய சுற்றறிக்கைகளை அனைத்து ஊழியருக்கும்
நேரில்  அளிப்போம் !
போராட்டக்குழுக்கள் அமைப்போம் !

தலைவர்களை அழைத்து சிறப்புக்கூட்டங்கள்  போடுவோம் !
அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிச் சங்கத் தலைவர்களை
நேரில் சென்று பார்ப்போம் ! கோரிக்கைகளை விளக்குவோம்!
அரசுத் துறை காக்க போராட்டத்தில் நேரில் கலந்து கொள்ள
அவர்களையும் அழைப்போம் ~!   பத்திரிகைகளில்  செய்திகள்
தினம் தினம் வரச் செய்வோம் !

JCA  வை வலுப்படுத்துவோம் !  ஊழியர் ஒற்றுமையை
பலப்படுத்துவோம் ! தவறாக திசை திருப்பப் படுவோருக்கும்
நேரான பாதை கட்டுவோம் ! இந்தப் போர்..... நம் அனைவரின்
உரிமை காக்கும் போர் என்பதை தெளிவு படுத்துவோம் !

என்ன தோழனே !  இந்த  வேலைகளெல்லாம் உங்கள் கோட்டத்தில்
நீ  செய்கிறாயா ?  செய்வாய் என்று நம்புகிறோம் !
இதற்குமுன்  செய்யவில்லை எனில் இன்று முதல் செய்வாய்
என்றும்  நம்புகிறோம் !  நீ செய்யாவிடில்  வேறு யார் செய்வார் ?

இது உன்னைக் காக்க போராட்டம்  !  நம்மைக்காக்க போராட்டம் !
இன்று இல்லையேல்  என்றும்  இல்லை ! 

களம்  இறங்கு ! ஆர்ப்பரி !  போராடு !  வெற்றி நமதே என்று
கொட்டு முரசு ! வருங்கால சமுதாயத்திற்கு நாம் வீழ்ந்தேனும்  
விதையாவோம் !

இதை எழுதும் போதே ..... லேசாகத் துவங்கிய சத்தம் ....
இப்போது பலமாகக் கேட்கத்துவங்கி விட்டதே! ....  அட...அது
என்ன சத்தம் .....   என் தோழன்  அறையும் முரசின்
சத்தமா  அது  ?   போர்  முரசு  சத்தமா அது ?

இது மாநிலமெங்கும் கேட்கத் துவங்குமோ ?
இந்தியத் திருநாடெங்கும் பரவத் துவங்குமோ ?

ஆம்  !  துவங்கும் !  தொடரும் ! .......   நம்  படை
களம் இறங்கும் .....  வெற்றிப் பதாகை
விண்ணில் பட்டொளி வீசிப்  படரும் .....

........... நம்பிக்கையோடு   டெல்லி நோக்கிச்
செல்கிறேன் தோழனே ! உன் பொறுப்பில் நான் !

.........  வாழ்த்துகிறேன் .....   வணங்குகிறேன் .....
அன்புடன் ..... என்றும் உன்  அன்புத் தொண்டன் ...  K .V .S .



Source : 
http://aipeup3tn.blogspot.com/

No comments:

Post a Comment