Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Saturday, 31 August 2013

APPROVAL OF CPMG, TN FOR SECRETARY , STAFF SIDE , RJCM , TAMILNADU

நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  தோழர். J .R . அவர்கள்  , நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தற்போது  மாநில கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு செயலராக  இலாக்காவால்  .அங்கீகரிக்கப் பட்டார் . இதன் மூலம் இனி ஊழியர் தரப்பு பிரச்சினைகளை  மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில் நம்மால் முழுமையாக  எடுத்துச் செல்ல  இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.  உங்கள் கோட்ட/கிளைகளில் தீர்க்கப் படாமல் உள்ள பொதுப் பிரச்சினைகள் (தனி நபர் பிரச்சினைகள் அல்ல ) , இலாக்கா விதி மீறிய  உத்திரவுகள் ,  ஊழியர் சேம  நலன்  சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்  இப்படி மாநில அளவில் எடுக்கக் கூடிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றை தெளிவாக  நீங்களோ அல்லது உங்கள் SYSTEM ADMINISTRATOR  அல்லது  E -MAIL  அனுப்பத் தெரிந்த தோழர் மூலமோ  நம்முடைய  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்திற்கு  எதிர்வரும் 08.09.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பிட வேண்டுகிறோம். 

ஆட்பற்றாக்குறை பிரச்சினை   என்பதை  உரிய புள்ளி விபரங்களுடன் அளித்திட வேண்டுகிறோம் . ஏனெனில் இந்தப் பிரச்சினையில்  ஏற்கனவே பலமுறை சரியான  தகவல்  தராததால், நம் கோரிக்கை  இழுத்தடிக்கப் பட்டு  நிராகரிக்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ளவும் . 

அது  P 4, R 3, R 4, ADMIN  , ACCOUNTS , SBCO, GDS   பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த அந்த மாநிலச் செயலர்களுக்கு  பிரச்சினைகளை அனுப்பி , அதன் நகலை மட்டும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்க முகவரிக்கு தவறாமல்   அனுப்பிடக் கோருகிறோம் .

 மின்னஞ்சல் முகவரி :  aipeup3tn@gmail.com

தயவு செய்து அலட்சியப் படுத்தாமல்  , கால தாமதப் படுத்தாமல்  இந்த செயலை செய்திட வேண்டுகிறோம்.  நிச்சயம் உங்கள் பிரச்சினை எதிர்வரும் 10.09.2013 க்குள்  மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தின் விவாதத்திற்கு வைக்கப் படும் . இப்போது விடுபட்டால்  இனி அடுத்த  4 அல்லது 5 மாதம் கடந்த பின்னரே  மறுபடியும் பிரச்சினை வைக்க முடியும் ஏற்கனவே எடுக்கப் பட்டு தீர்க்கப் படாத பிரச்சினைகள் ஆனாலும் மீண்டும் அதனை எழுப்பிட  நிச்சயம் முயற்சிக்கிறோம். எனவே அதனையும் கருத்தில் கொள்ளவும் .

RJCM  என்பது மாநில அளவில் உச்ச மட்ட அமைப்பு என்பதால்  நிச்சயம் பல பிரச்சினைகளை இதில் எடுத்துச் சென்று பேசி தீர்த்திட சட்ட ரீதியாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொண்டிட  வேண்டுகிறோம். இதர  மத்திய அரசு , மாநில அரசு , பொதுத் துறைகளில் இப்படிப் பட்ட வாய்ப்புகள்  மறுக்கப் பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம். 

எனவே இந்த அமைப்பை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உங்களின்  ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.  இந்த செய்தியை , இதனை படிக்கும் அனைத்து  தோழர்களும் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள் படிக்காமல் இருந்தால், அவர்களுக்கு  தெரிவித்து முழுமையாக  உபயோகப் படுத்திக் கொள்ளவும்.

ஒருபுறம் நாம் வாதாடும் களம் !  
முடியவில்லையானால் போராடும் களம் !
நிச்சயம்  பிரச்சினையை தீர்த்திட முயலுவோம் !

நன்றியுடன் 
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று , 
தமிழ் மாநிலம் .

Saturday, 24 August 2013

திண்டுக்கல் மாவட்ட ஓய்வூதியர் சங்கம் துவக்கம்


GDS ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி



            போனஸ் உச்சவரம்பு ரூபாய் 3500 க்கு அஞ்சல் வாரியம் கொடுத்த  பரிந்துரையை  நிதி அமைச்சகம்  ஏற்று கொண்டு  மத்திய அமைச்சரவை யின்  ஒப்புதலுக்கு  அனுப்பி உள்ளது என்பதனை மகிழ்வோடு தெரிவித்து  கொள்கிறோம் . இந்த வெற்றிக்கு பின்னால் இரத்தம் சிந்திய என்  அருமை  GDS  தோழர்களை  வணங்குகிறோம் .

              கண்ணீரோடு விதைக்கிறவன் ---
              கம்பிரத்தோடு அறுவடை செய்கிறான் 

Tuesday, 20 August 2013

Facilities for Outsourced Staff - Ministry of Labour& Employment

அன்புத் தோழர்களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே ! விழிமின் !  எழுமின் !
கீழே உள்ள செய்தியை  நன்றாகப் படியுங்கள் !
===========================================================================

Any establishment can employ contract workers in any job or process unless it is prohibited under section 10 of the Contract Labour (Regulation & Abolition) Act, 1970. However, the establishments engaging contract workers have to follow the statutory provisions contained in labour laws. 

No centralized data in this regard is maintained. The period and norms of contract labour depends on the term and conditions of the contract or work/job between the Principal Employer and the contractor/worker. 

As per Rule 25(2) of the Contract Labour (Regulation & Abolition) Central Rules, 1971, the wages of the contract labour shall not be less than the rates prescribed under Minimum Wages Act, 1948 and in cases where the contract workers perform the same or similar kind of work as the workmen directly employed by the principal employer of the establishmentthe wage rates, holidays , hours of work and other conditions of service shall be the same as applicable to the workmen directly employed by the principal employer doing the same or similar kind of work. The liability to ensure payment of wages and other benefits is primarily that of the contractor and, in case of defaults, that of the principal employer. 

In case of complaints, field offices of Chief Labour Commissioner (Central) Organization investigate and take action. Social security aspects of contract workers under Employees Provident Fund and Miscellaneous Provision Act, 1952 and Employees State Insurance Act 1948 are enforced by the Employees Provident Fund organization and Employees State Insurance Corporation respectively provided the establishments in which outsourced workers are working are covered under the said Act. 
This information was given by Minister of State for Labour & Employment Shri Kodikunnil Suresh in the Lok Sabha today in reply to a written question.
Source : PIB
============================================================================
தினக்கூலி அடிப்படையில்  தபால்காரர்/ MTS  பணிகள்  பார்க்கும்  பதிலிகளுக்கு (CASUAL  LABOURER) அவர்கள் பார்க்கும் பதவியின்  குறைந்த பட்ச ஊதியம், மற்றும் அதே பணி  நேரம், மற்றும் விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்கப் பட வேண்டும். 

 இப்படி தற்போது வழங்கப் படவில்லை என புகார் பரவலாக எழுந்துள்ளது. அதனால் , பாதிக்கப் பட்ட ஊழியர்கள் முதலில்  ஊதியம் வழங்கிடும் அதிகாரிகளுக்கு  ,அந்தந்த  ஊழியரின்  பணிக்காலம்  தற்போதைய பணி  உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு  அவர்களுக்கு  அவர்கள் பார்க்கும்  பதவியின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும்  விடுமுறை ஊதியம்  வழங்கிட முதலில் மனுச் செய்யவும். 

15 நாட்களுக்குள் பதில்  அளிக்கப்படவில்லை எனில் , தொழிற்சங்கம் மூலமாக அந்தந்த ஊழியரின் மனு நகலை இணைத்து அந்தந்த பணி  நியமன அதிகாரிக்கு புகார் செய்யவும் . 15 நாட்களுக்குள்  இதற்கும் பதில் அளிக்கப் படவில்லை எனில் , இரண்டு  மனுக்களின் நகல்களையும் இணைத்து ,

REGIONAL LABOUR COMMISSIONER(CENTRAL), NO. 26,  IIIrd BLOCK, 5TH FLOOR, SHASTRI BHAVAN, HADDOWS ROAD, NUNGAMBAKKAM, CHENNAI 600 006 

என்ற முகவரிக்கு  பதிவுத்தபாலில்  புகார் மனு அளிக்கவும் . அதன் மீது  தொழிலாளர் நல ஆணையர்  உங்கள்  நியமன அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி  conciliation  talks  க்கு  உங்களையும்,  உங்கள் அதிகாரியையும்  அழைப்பார்.  அதில் உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயம்  கிடைக்கும். அதற்கான சட்ட விதி தான் மேலே குறிப்பிடப் பட்டுள்ளது.  

இதில் பதிவு செய்யப் படும்  minutes  அமல் படுத்தப் படவில்லையானால் , நிச்சயம் உங்களுக்கு ஆதரவாக  மத்திய  நிர்வாகத் தீர்ப்பாயம்(CAT ) சென்னையில்  உங்களுக்கு  தீர்ப்பு கிடைக்கும் . 

அதற்கு உதவிட மாநிலச் சங்கம் தயாராக உள்ளது . இந்த செய்தியை  அனைத்து தோழர்களுக்கும்  தெரிவிக்கவும். 

NOTIFIED DEPARTMENTAL QUOTA VACANCIES IN PA CADRE FOR THE YR 2013


அன்புத் தோழர்களே ! ஏற்கனவே 2011, 2012 க்கான நேரடி எழுத்தர் தேர்வுக் கான காலியிடங்கள் அறிவிக்கப் பட்டு தேர்வு நடைபெற்றுள்ளது . அது போல 2013 க்கான நேரடி எழுத்தர் காலியிடங்கள் அறிவிக்கப் பட வுள்ளது. மேலும் , 2013 க்கான LGO விலிருந்து P Aவுக்கான காலியிடங்கள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளன. அதனை கீழே பார்க்கவும் .

Source : http://aipeup3tn.blogspot.in/

Monday, 19 August 2013

better late, than never!!

better late, than never!!
at last department of posts and ministry of communications admitted that mckensey
model (mnop) l1, l2
is a total failure
orders issued to restore the old position
name remains (l1, L2) but the scheme stands scraped
the stand taken by the jca (nfpe & fnpo)
from the very beginning has been proved right.
it is a victory for our continuous campaign and struggles including the decision for indefinite strike which compelled the department to give an assurance that no rms offices will be closed.
nfpe congratulates the entire postal and rms
employees for this victory.
Now the question to be answered by the authorities are:
1. Who is responsible for the delay caused to the public mails due to back-routing for the last two years?
2. Who is responsible for the loss of public faith and trust in the Postal department due to heavy delay caused due to L1, L2 in processing and transmission of public mails?
3. Who is responsible for paying an amount of more than 100 crores to be Mckensey Consultancy for this anti-people, anti-worker, “Tuglak Model” reforms?
4. Who are those behind this shady deal with the Mckensy consultancy? Why are they not taken to task?
M. Krishnan

Secretary General NFPE.

Saturday, 10 August 2013

மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான NFPE பயிலரங்கின் சில துளிகள்


மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான NFPE பயிலரங்கின் சில துளிகள்

அன்புத் தோழர்களே, தோழியர்களே.....

                     09.08.13 அன்று மதுரையில், குளு குளு அரங்கில் மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் இயக்கமான NFPE-ன் எழுச்சி மிகு பயிலரங்குக் கூட்டத்தினை நடத்த மதுரைக் கோட்டம் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து முன்னணித் தோழர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கீழ்க்காணும் தலைப்புகளில், மாநில, மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், பயிற்சி அளித்தனர்.

                இளைஞர்களும் தொழிற்சங்க வரலாறு, தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாநிலத் தலைவர் சிரி. வெங்கடேசன் அவர்களும், தாந்தோன்றித் தனமாக செயல்படும் அதிகாரிகளுக்கு கடிவாளம் போடக் கையாள வேண்டிய RTI சட்டம் குறித்தும், CONTRIBUTORY NEGLIGENCE குறித்து முன்னாள் மாநிலச் செயலர் தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்களும், மாறி வரும் காலகட்டத்தில் அஞ்சல் துறை வளர்ச்சி, ஊழியர் பணிப்பாதுகாப்பு, எதிர்காலத் திட்டங்கள், அஞ்சல் துறையில் வரவேற்கத்தக்கதும், எதிர்க்கத்தக்க அம்சங்கள் குறித்து மாநிலச் செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களும், CCS-CCA விதிமுறைகள், அடாவடித்தனம் செய்யும் அதிகாரிகளின் பழிவாங்கும் போக்கில் இருந்து ஊழியர்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்னாள் மத்திய செயலர் அறிவு ஜீவி தோழர் K.V.சிரிதரன் அவர்களும் விரிவாக உரையாற்றியது, கலந்து கொண்ட தோழர்களுக்கு, அறிவமுதை வார்த்ததாக இருந்தது என்றால் அது மிகையல்ல.... !!!

                  இதுபோன்ற தொடர்ச்சியான பயிலரங்க்குக் கூட்டங்கள் இனிவரும் காலங்களில் நடத்தப்படும் என்றும் கோட்டத்திற்கு 5 இளைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலாக்கா விதிமுறைகள், தொழிலாளர் சட்டங்கள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டு,  எதிர்காலத்திலும் NFPE இயக்கத்தை இதே போல வலுமையான இயக்கமாக, ஊழியர் பாதுகாப்புக்கு உறுதி சேர்க்கும் இயக்கமாக தொடர சூளுரைக்கப்பட்டது. 

தோழமை வாழ்த்துகளுடன்,

  President                             Secretary                        Finance secretary
Tamil sevan                         Murugesan                           Narayanan

பயிலரங்கின் சில துளிகள் இதோ.....






















Courtesy : http://nfpemadurai.blogspot.in/

Tuesday, 6 August 2013

NATIONAL CONVENTION OF WORKERS

சமீப கால முன்னேற்றம் .. அனைத்து தொழிற்சங்கங்களும் கட்சி வேறுபாடு இன்றி ஓரணியில் ... 

CENTRAL TRADE UNIONS HELD NATIONAL WORKERS CONVENTION
AT NEW DELHI ON 06TH AUGUST 2013

A massive National convention of all Central Trade Unions, Central and State Government Employees & Teachers Federations and Public Sector employees Unons etc was held at Mavlankar Hall New Delhi on 6th August 2013. The convention was addressed by the leaders of BMS, INTUC, AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, SEWA, AICCTU, UTUC, LPF.Presidium consisted of the leaders of all the above Central Trade Unions. The resolution adopted by the National convention called upon the workers to organize following.

1. Demonstration/Rallies/Satyagraha at all state capitals with respective statewide mobilization on 25th September 2013
2. Massive Demonstration before Parliament with main mobilization from neighbouring states on 12th December, 2013
3. On the same day of Demonstration before Parliament (12th December 2013), District-level Demonstrations at all District Headquarters all over the country.
4.  Sectoral programme of joint actions for effectively opposing Restructuring, Outsourcing etc. and on sector-specific issues/demands and against Divestment of shares in Pubic Sector Enterprises.
5.  Exclusive Joint Action Programmes on the demand of Minimum Wage and Contract Workers related other demands.