Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Wednesday, 27 November 2013

SUBJECTS TAKEN UP FOR DISCUSSIONS IN THE JCM (DC) MEETING TO BE HELD ON 27.11.2013 - RAISED BY TN CIRCLE UNION


அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.  இன்று (27.11.2013) JCM (DEPARTMENTAL  COUNCIL ) கூட்டம் டெல்லியில்  நடைபெற உள்ளது.  

நமது தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பாக , நமது மாநிலச் சங்கத்தால் ஏற்கனவே RJCM  மற்றும்  FOUR  MONTHLY  MEETING  இல் எடுக்கப்பட்டும்  நிர்வாகத்தால் மறுக்கப்பட்ட  அல்லது தீர்வாகாத பல பிரச்சினைகளை நாம் நமது மத்திய சங்கத்திற்கு அளித்துள்ளோம். அந்த பிரச்சினைகளை  நமது பொதுச் செயலர் JCM (DC ) கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துள்ளார்.  மொத்தம் 102 பிரச்சினைகள் விவாதத்திற்கு வைக்கப் பட்டிருந்தபோதிலும் , நமது  அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்டு  தற்போது எடுக்கப் பட்டுள்ள  சில பிரச்சினைகளை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

உதவிக் கரம் நீட்டுங்கள் !



அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

இது ஒரு முக்கியமான வேண்டுகோள் !  நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாதுஎந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதுஅர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக ,பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத்தோழர் E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
.வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  திரு.  V .கார்த்திகேயன் அவர்கள் ( வயது 35) வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத்தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார் .

திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின் பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது .  தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம்  நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும்  தெரிவிக்கவும்.
  
Com. P.Kumar,
Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001.

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தில் மாணப் பெரிது" 

Source : http://aipeup3tn.blogspot.in/

Sunday, 24 November 2013

Hand Book 2014

Hand Book 2014 மத்திய சங்கத்தால் வெளியிடப் படுகிறது . மிகச் சிறந்த இலாக்கா விதிகளின் தொகுப்பு . தொழிற் சங்க செய்திகள் . அனைத்து மாநிலங்களின் மாநிலச் செயலர்கள் , கோட்ட/ கிளைச் செயலர்களின் தொலைபேசி , ஈ. மெயில் முகவரி இன்னும் ..இன்னும்... பல விபரங்களின் தொகுப்பு .. உங்கள் தனிப் பிரதிக்கும் நீங்கள் e-mail செய்யலாம் . VPP யில் அனுப்பப் படும். உங்கள் கோட்ட/ கிளைச் செயலர்கள் மூலமும் மொத்தமாகப் பெற்று பிரித்துக் கொள்ளலாம் தொடர்புக்கு : Phone/SMS to 09013946988, 07838019997, 09868853970

CHQ e-mail ID: aipeugrc@gmail.com

You are requested to send indent for Hand Book - 2014 immediately.

Comradely yours,

(M. Krishnan)

General Secretary

Saturday, 23 November 2013

NFPE IS 60 YEARS OLD - BUT STILL IT IS YOUNG !

NFPE பேரியக்கத்திற்கு வயது அறுபது .. ஆனாலும் என்றும் இளையது !


National Federation of Postal Employees (NFPE) is a class-oriented militant organisation of above five lakhs postal employees. NFPTE was formed on 24.11.1954

The P&T trade union movement in India has inherited a history of struggles and sacrifices right from the days of British Raj. During 1905 when there was no freedom to form unions, Babu Tarapada Mukherjee started this organisation in the name of a Postal Club at Kolkata GPO. Tarapada was dismissed from service by the British Government for delivering a speech against the British Government in the year 1921 at Lahore All India Conference. During the last more than one hundred years many leaders and workers of this organisation has been tortured, arrested and put under jail both by the British and Indian Governments. Com. Dada Ghosh, founder Secretary General of NFPTE was arrested and placed under prolonged suspension. Com.N.J.Iyer, former All India President of NFPE was arrested for delivering a speech against “Emergency” in 1975 and imprisoned in Bikanir Jail for 18 months. Com.K.Adinarayana, Former Secretary General of NFPE was in jail for three years for participating in the Telangara struggle against Nizam. Com. K. G. Bose, who electrified the P&T Trade Union movement with his class-oriented approach was dismissed from service. Many legendary leaders like Coms. O. P. Gupta, Henry Barton, V. G. Dalvi, K. L. Moza, A. S. Rajan, Piramanathan, N. C. Ambalavanan have lead this organization in the past.

25 days historic 1946 P&T strike is marked in the history of India’s freedom movement as one of the most militant struggle launched by P&T employees against the British Raj. 1960 five days strike of Central Government Employees, 1968 September 19th one day strike for Need Based Minimum wage in which 17 employees have been brutally murdered by the Government by resorting to firing and lathicharge. 1974 Bonus Strike, 1984 September 19th Strike for the emancipation of three lakhs Extra-Departmental employees, 1993 five day’s Postal Strike, 1996 eight days strike for bonus ceiling removal, 1998 eight days Postal strike, 2000 fourteen days Postal Strike were all lead by the National Federation of Postal Employees. The one day strike by Confederation of Central Govt. Employees and Workers conducted last year on 12-12-2012 is another milestone in the history of Postal Trade Union movement.

NFPE has been participating in all the nationwide General strikes including the 2013 February 20,21 two days strike conducted by the Central Trade Unions, right from 1991 onwards against the Neo-liberal imperialist globalisation policies pursued by the Central Government.

NFPE has conducted innumerable struggles for realisation of the legitimate demands of the Postal employees especially the most down-trodden section of Gramin Dak Sevaks and Casual, Part-time, Contingent employees.

NFPE is an affiliate of the Confederation of Central Govt. employees and Workers and is playing leading role in mobilising the Central Government employees and organising struggles including nation wide strikes.

Due to neo-liberal policies implemented by the Central Government during the last more than two decades, the Central Services including Postal department is facing great threat against its existence. Ban on recruitment, outsourcing, downsizing, contractorisation, contributory pension scheme, non-regularisation of the services of Gramin Dak Sevaks, restrictions on compassionate appointments, Bonus discrimination are all the off shoots of this policy. Due to unprecedented price rise the real wages of the employees and workers have eroded like anything. The Central Govt. employees are on continuous struggle demanding appointment of Seventh Pay Commission with effect from 01.01.2011, 50% DA merger, regularisation of Gramin Dak Sevaks and Casual labourers etc.

NFPE Federal council held at Hyderabad in June 2013 has decided to celebrate the Diamond Jubilee of NFPE in a befitting manner. Inaugural ceremony of one year long celebrations will be held at New Delhi on 24.11.2013 and final celebrations will be organized at Jam Nagar (Gujarath) in a grand manner on 24th November 2014.
One year long Diamond Jubilee celebrations of NFPE shall definitely discuss all the issues confronting the working class in general and the Postal employees in particular and formulate programmes for future course of action.

NFPE calls upon the entire postal employees to conduct seminars, general body meetings, trade union workshops, honouring former leaders, exhibitions, classes on the history of the postal trade union movement etc. during the period from 24th November 2013 to 24th November 2014 as part of Diamond Jubilee celebrations.

Let us be proud of being a part of this great and glorious organization and let us carry forward our uncompromising fight against all injustices.

சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!






மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:

சிறப்பு வசதி!
''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.



யாருக்கு?
அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கமிஷன்!
சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும். 

ஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும். 

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.

அங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!

- செ.கார்த்திகேயன், படம்: ஆ.முத்துக்குமார்.

=விகடன் இதழுக்கு இந்த செய்தியை அளித்த நமது சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் !










Wednesday, 20 November 2013

MARCH TO PARLIAMENT - STAY FOR T.N. COMRADES AND OTHER DETAILS

அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே ! 
 மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !

எதிர் வரும் 11.12.2013 மற்றும் 12.12.2013 தேதிகளில்  நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணியில் கலந்துகொள்வதற்கு ஊழியர்களை தயார்படுத்தும் பணியில் இருப்பீர்கள்  என்று  எண்ணுகிறோம்.  இதுவரை நான்கு கிளைகளில் இருந்து மட்டும்  எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்ற தகவல்  கோட்ட/ கிளைச் செயலர்களிடம் இருந்து வந்துள்ளது. இதர கிளைகளில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை . சரியான தகவல் வந்தால் மட்டுமே  நம்முடைய தோழர்கள் தங்குவதற்கு   டெல்லி மாநகரில் இடவசதி செய்து தர இயலும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் அந்த நேரத்தில் எந்த ஏற்பாடும் செய்திட இயலாது என்பதையும்  கவனத்தில் கொண்டிட வேண்டுகிறோம்.

இருந்த போதிலும்  தற்போது 10.12.2013 மற்றும் 11.12.2013 ஆகிய இரு தேதிகளுக்கு தமிழகத்தில் இருந்து வரும் தோழர்களுக்கு மட்டும் தனியே  திருமண மண்டபம்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . 12.12.2013 தேதியில் அதே  இடம் பெறுவதில் சற்று சிக்கல்  உள்ளதாக நமது துணைப் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் 12.12.2013 அன்றும்  அதே மண்டபம் ஏற்பாடு செய்திட நாம் கோரியுள்ளோம்.

இடம் :  சுபம்  திருமண மண்டபம் 
சரோஜினி நகர் அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகம் 
சரோஜினி நகர் பஸ் டிப்போ  நேர் எதிரில் .
புது டெல்லி .

இந்த குடியிருப்பு வளாகத்தில் தான் நமது துணைப் பொதுச் செயலரும் தங்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே  இதர உதவி பெறுவதில் பிரச்சினை எதுவும் நம்  தோழர்களுக்கு இருக்காது .

அவரது அலைபேசி  எண் : 07838019997  
இல்லத் தொலைபேசி எண் : 01124121329

சரோஜினி நகர்  வருவதற்கு  வழிக் குறிப்பு 

புது டெல்லி HAZRAT  NIZAMUDDIN  RAILWAY  STATION  இல் இறங்க வேண்டும் . அங்கிருந்து  சரோஜினி நகர் பஸ் டெப்போ  வுக்கு ஆட்டோ அல்லது வாடகை  காரில்தான் வர இயலும் . மொத்த தூரம் 8.5  கி. மீ. பயண நேரம் 20 லிருந்து 25 நிமிடங்கள் .

அரசு நிர்ணய ஆட்டோ கட்டணம் : 

பகலில்  3 பேருக்கு  ரூ. 77.00   இரவில்   3 பேருக்கு : ரூ. 96.00

அரசு நிர்ணய வாடகை கார்  கட்டணம் : 

பகலில்  4 பேருக்கு  ரூ. 130.00  இரவில்  4 பேருக்கு ரூ. 162.00

CAB  இல்  7 பேர் வருவதற்கு  கட்டணம் :

 பகலில் ரூ. 170.00  இரவில்  ரூ. 200.00

சரோஜினி நகரில் இருந்து JANTAR  MANTAR  வருவதற்கு வழிக் குறிப்பு 

சரோஜினி நகரில் இருந்து  பேரணி நடைபெறும் JANTAR  MANTAR பகுதிக்கான தூரம் 8.5 கி.மீ.  பயண நேரம் 20 நிமிடங்கள் . ஆட்டோ கட்டணம்   3 பேருக்கு  ரூ. 75.00   கால் டாக்ஸி :  4 பேருக்கு  ரூ. 130.00 . 

சரோஜினி நகர்  சுபம்  திருமண மண்டபம்  அமைந்துள்ள  அஞ்சல் குடியிருப்புக்கு நேர் எதிரே ( நமது  துணைப் பொதுச் செயலரின்  வீட்டிற்கு நேர் எதிரே )  சரோஜினி  நகர் பஸ் டெப்போ  உள்ளது . அங்கேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது . அந்த பேருந்து நிறுத்தத்தில்  இருந்து  பேருந்து நேரிடையாக உள்ளது . அதன் பயண நேரம் 30 - 40 நிமிடங்கள் .

அருகில் AIIMS METRO ரயில்வே ஸ்டேஷன் உள்ளது . அதற்கு சரோஜினி நகரில் இருந்து  நடந்தும்  செல்லலாம். அல்லது  எதிரே உள்ள பஸ் டெப்போ  நிறுத்தத்தில் இருந்து  தடம் எண்  544 என்ற பேருந்தில்  ஏறி அருகில் உள்ள AIIMS  METRO RAILWAY STATION இல் இறங்கி அங்கிருந்து YELLOW LINE METRO ரயில் மூலம் PATEL CHOWK  METRO  STATION  இல் இறங்கி GATE NO  4 வழியே வெளியே வந்தால்  JANTAR MANTAR  வரலாம். 

இது தவிர  பேரணிக்கு முன்னதாகவோ அல்லது  மறுநாளோ தங்கி   டெல்லி நகரை  மற்றும் அதன் அருகாமையில் உள்ள  ஆக்ரா , பதேபூர் சிக்ரி , மதுரா, பிருந்தாவன்  உள்ளிட்ட பகுதிகளை  சுற்றிப் பார்க்க விரும்பும் தோழர்களுக்கு   சுற்றுலா  VAN   அல்லது பேருந்து தினம்  காலை 07.00 மணிக்கு புறப்பட்டு  இரவு 08.00 - 10.00 க்குள் திரும்புமாறு  உள்ளன . 

அவற்றை  நமது  துணைப் பொதுச் செயலர் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் . ஓரளவு நியாயமான கட்டணத்தில்  இந்த வசதியை பெறலாம். நேரிடையாக வரும் AGENT  கள்  மூலம் செல்ல வேண்டாம் . ஏனெனில் அவர்கள்  மொழி தெரியாத நம் தோழர்களிடம்  ஏமாற்றிட வாய்ப்பு உள்ளது .  மேலும் தென்னிந்திய உணவு  கிடைக்கும் இடங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

கோட்ட/ கிளைச் செயலர்களே !

1) நீங்கள்  வரும் போது உங்கள் கோட்டத்தின் BANNER  மற்றும் கொடியுடன் தவறாமல் வருகை  தர வேண்டுகிறோம். 

2)  இது டிசம்பர் மாதமானதால் டெல்லி நகரில் குளிர் அதிகமாக இருக்கும்.எனவே கண்டிப்பாக பேரணிக்கு வரும் தோழர்கள் அனைவரிடமும்  கம்பளி ஆடைகள் , போர்வை , ஸ்வெட்டர் , கம்பளி தலைக் குல்லாய்  கொண்டுவர அறிவுறுத்தவும் .

3) பேரணியில் தமிழகத்தை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தமிழக அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS  மூன்று , RMS  நான்கு , GDS  தோழர்கள்தமிழகத்தின்  BANNER  இன் கீழ்  வரிசைப் பட்டு  நிற்க அந்தந்த பகுதி தோழர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தவும்.

4) இந்த  செய்திக்  குறிப்பை  நகல் எடுத்து  பேரணிக்கு வரும் அனைத்து தோழர்களிடமும்  கண்டிப்பாக கொடுக்கவும்.

Tuesday, 12 November 2013

FLASH NEWS : CHANGE OF HOLIDAY



FLASH NEWS
CHANGE OF HOLIDAY
MUHARRAM HOLIDAY ALREADY DECLARED ON 14.11.2013
HAS BEEN CHANGED TO 15.11.2013 FRIDAY


Tuesday, 5 November 2013

Results of Direct Recruitment - PA/SA (April/Aug-2013) declared in Tamilnadu Circle





அன்புத் தோழர்களே !  இளைய தோழர்கள்  இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த  எழுத்தர்  தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும்    இணைப்பை ' கிளிக் " செய்து  தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.-






Click Here to view : 
PA Results   /     SA Result    /    SBCO & ForeignPost

Click Here to Download


புதிதாக  இந்த இலாக்காவில் இணைய உள்ள  இளைய உள்ளங்களுக்கு , எங்கள் இளைய தோழர் மற்றும் தோழியர்களுக்கு  எதிர்காலம் இனிதாக அமைய  NFPE  அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு  தமிழ் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் ! 

உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட  நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU   GROUP 'C'  சங்கம் !

என் அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே !
புதிய தோழர்களை  நீங்கள் அரவணைத்து  நமது சங்கத்தின் 
தியாகங்களை / வெற்றிகளை எடுத்துச் சொல்லி  நம்முடன் 
இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திடுங்கள் !
பணியில் சேர அவர்கள் வரும்  நாட்களில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து  உதவிடுங்கள் ! 
அவர்களின்  தேவைகளை அறிந்து  உதவிக் கரம் 
நீட்டிடுங்கள் !

 இளைய தோழர்களான உங்களை 
 நாங்கள் வருக வருக என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் !

அன்புடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று 
தமிழ் மாநிலம்.

Sunday, 3 November 2013

Congratulations


Shri. E Murugadas, PA to SSRM, "MA" Dn & Circle Secretary, TN Circle has been unanimously elected as the General Secretary in the VIII  All India Conference held at Kanniyakumari on 26th October 2013. 

NFPE Dindigul Congratulates him  and his new team. All the genuine demands of AIPSA will come into reality in his regime.





Saturday, 2 November 2013

LSG PROMOTIONS ON THE MOVE AGAIN BASED ON DATE OF CONFIRMATION IN TAMIL NADU CIRCLE




நீண்ட காலமாக  தேங்கிக் கிடந்த LSG  பதவி உயர்வு என்பது தமிழ்நாடு வட்டத்தில்  தற்போது  அளிக்கப் பட  முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளது . கடந்த மாதத்தில் நடைபெற்ற JCM  இலாக்காக் குழு கூட்டத்தில்  அளிக்கப் பட்ட பதிலின் விளைவாக அனைத்து LSG /HSG  காலியிடங்களும் - உடன் அதற்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப் பட்டு - வழங்கப் படவேண்டும்-என்று இலாக்கா உத்திரவு இட்டதால்  தற்போது மீண்டும்  மாநில அஞ்சல் நிர்வாகம் சுறுசுறுப்பு  அடைந்துள்ளது. 

 JCM  DC  கூட்டத்தில் தமிழகத்திற்கென்று  தனியே வழிகாட்டுதல் அளிக்கப் படும் என்று இலாக்கா பதில் அளித்திருந்தாலும் (பார்க்க  MINUTES  நகலை ) இதுவரை  DTE  இல் இருந்து எந்த பதிலும் வரவில்லை . மேலும் நமது பொதுச் செயலரும் இது குறித்து இலாக்கா முதல்வருக்கு மீண்டும் நினைவூட்டுக் கடிதம் எழுதியும்  இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை . (கடித நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது ) 

எனவே தற்போது DATE  OF CONFIRMATION  அடிப்படையில் மீண்டும் SENIORITY  LIST  சரிபார்க்கப் பட்டு  தமிழகமெங்கும் சுற்றுக்கு விடப் பட்டுள்ளது.

'Seniority List of Postal Assistants in Tamilnadu Circle 
as on 01.01.2011 
who were confirmed prior to 04.11.1992'

என்ற அடிப்படையில் 1302  ஊழியர்களின் பட்டியல்  அனுப்பப் பட்டுள்ளது.
மேலும் PROMOTIVE  க்கும் அதே ஆண்டுக்கான DIRECT  RECRUIT க்கான  பட்டியலும் தனியே அனுப்பப் பட்டுள்ளது.  இதன் அடிப்படையில்  ONE  TIME CONFIRMATION  ஆன PROMOTIVE  இன்  SENIORITY  நிர்ணயிக்கப் படும் . இதற்கான  மாநில நிர்வாகத்தின்  கடித நகலை கீழே பார்க்கவும்.

05.11.2013 க்குள் இந்த SENIORITY  LIST  இல் பிரச்சினை உள்ளவர்கள்  மனுச் செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்பட்டு  பட்டியல் இறுதி செய்த பிறகு LSG  பட்டியல் போடப்படும் .

Friday, 1 November 2013

Wish you all a Happy Deepavali


Wish you all a Happy Deepavali



குறைந்தபட்ச ஊதியம், பிஎப், பென்ஷன்... எதுவும் கிடையாது 2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை




திருவில்லிபுத்தூர் : ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப் பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் ‘ஜிடிஎஸ்’எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.