Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 31 July 2014

நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் தோழர். K. நாராயணன் அவர்கள் தல்லாகுளம் HO 31/07/2014 இன்று அரசுப் பணி நிறைவு

WISHING A HAPPY RETIRED LIFE !

    நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் தோழர்  K. நாராயணன் அவர்கள் (9894822912) PRI(P), தல்லாகுளம் HO இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார். அவர்தம் காலத்தில் தென் மண்டலத்தில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன என்பது தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தெரியும். முழுமையான தொழிற் சங்க ஈடுபாடு, சுறுசுறுப்பு , எந்த செயலையும் உடனே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து உயர் மட்ட தலைவர்களுடனும் நேரடி அறிமுகம் , சங்கத்தில் பிரச்சினைகள் இருந்த காலத்திலும் துவளாமல் செயல்பாடு. இவையே தோழர் நாராயணின் சிறப்புக்கள் ஆகும். அவர்தம் பணி நிறைவுக் காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

இவருக்கான கோட்டச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள பாராட்டு விழா எதிர்வரும் 15.08.2014 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.

Monday, 21 July 2014

நமது கோட்டத்திற்கு புதிய முதுநிலை கண்காணிப்பாளர் (SSPOs)

      01/07/2014 முதல் நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


  நமது கோட்டத்திற்கு புதிய முதுநிலை கண்காணிப்பாளராக  Shri. Chandrasekara Kakkamanu  இன்று 21/07/2014 பதவி ஏற்றுள்ளார்.வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்Thursday, 17 July 2014

அதிக பலன் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்!!

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் 80சி பிரிவின் கீழ் பலன்களைக் கொடுத்து, நாட்டின் சேமிப்பை அதிகரிக்க மிகச்சிறந்த வழியைக் காண்பித்திருக்கிறார் நிதியமைச்சரான அருண் ஜேட்லி. 2014ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, நம்மைக் கவரும் வகையில் காத்திருக்கும் சில அஞ்சலக திட்டங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.....

தேசிய சேமிப்பு பத்திரம்:
சிறிய முதலீட்டாளர்களுக்கு மேலும் பலன் தரும் வகையில் காப்பீட்டு வசதியுடன் கூடிய தேசிய சேமிப்புத் பத்திரத்தை இந்த பட்ஜெட் அறிவித்துள்ளது. இதன் உண்மையான பலன்கள் இன்னும் அறியப்படவில்லை. எனினும், இந்த தேசிய சேமிப்பு பத்திரம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகளை அளித்து வருகிறது, மேலும் இப்பொழுது இந்த சலுகையுடன் காப்பீடும் சேர்ந்துள்ளதால், இது இந்தியாவின் வரி குறைவான மற்றும் பாதுகாப்பான திட்டமாக உருமாறியுள்ளது.

கிஸான் விகாஸ் பத்திரம்:
மிகவும் பிரபலமானதாக இருந்த, கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KVP-யில் 8 வருடங்கள் 7 மாதங்களில் நாம் முதலீடு செய்க பணம் இரண்டு மடங்காகி விடும். இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இது மற்றுமொரு சிறப்பான வரி சேமிப்புத் திட்டமாகும். அதுவும் அரசு சார்ந்ததாக இருப்பதால், பாதுகாப்பைப் பற்றி கவலை பட வேண்டியதும் இல்லை.

பொது சேமநல நிதியின் அளவு உயர்வு:
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் 1 இலட்சமாக இருந்த பொது சேமநல நிதியின் உயர் அளவு, 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 80சி பிரிவின் கீழ், வரி இல்லாத வட்டியும் தரக்கூடிய திட்டமாதலால் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்.

80சி பிரிவின் உயர் அளவு அதிகரிப்பு :
வரி விலக்கு அளவை 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சமாக மத்திய பட்ஜெட் உயர்த்தியுள்ளது. அஞ்சலகத்தில் வழங்கப்படும் பெரும்பால சிறு சேமிப்புத் திட்டங்களான NSC, PPF மற்றும் KVP ஆகியவற்றிற்கு 80சி பிரிவின் சலுகைகள் பொருந்தும். இதன் மூலம் அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் கவர்ச்சியான திட்டங்களாக மாறியுள்ளன.

Tuesday, 8 July 2014

ANNOUNCED VACANCIES OF P.A. CADRE IN TN CIRCLE AND THE PRESENT POSITION OF VARIOUS EXAM RESULTS

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். இன்று (07.07.2014) நம் மாநிலச் செயலர் தோழர். J .R .  அவர்களின்  CPMG , TN  மற்றும் DPS  HQ  உடனான சந்திப்பு , மற்றும் இதர அதிகாரிகளுடனான  சந்திப்பு நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சினைகள்  விவாதிக்கப்பட்டன. அவற்றை  மேலே உள்ள POST  இல் பார்க்கலாம். 

தற்போது நடைபெற்ற தேர்வுகள், காலியிடங்கள் , LSG  பதவி உயர்வு குறித்த இன்றைய நிலை போன்ற பிரச்சினைகளில் உரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கீழே காணலாம். 

நாம் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் 2014 க்கான (31.12.2014 வரை )  நேரடி எழுத்தர் (P.A.P.O.)அறிவிக்கபபட்ட  காலியிடங்களை தெரிவித் திருந்தோம். அது மொத்தம்   :      641

தற்போது 2014 க்கான  LGO  விலிருந்து (DEPARTMENTAL  QUOTA)  எழுத்தருக்கான காலியிடங்கள்  அறிவிக்கப்பட உள்ளன . அவை மொத்தம் :      265 

மேலும் 2012 க்கான GDS  இலிருந்து எழுத்தராவதற்கான(RESIDUAL  VACANCIES)  காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவை மொத்தம்:  254

(ஆனால் காலியிடங்களை ஈடுகட்டும் அளவுக்குக் கூட GDS  இலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்பது வருத்தமே . ஆதலால் தேர்வு எழுதும் GDS  ஊழியர் குறைந்த பட்ச  மதிப்பெண் (O C : 40% OBC : 37 % SC /ST : 33%  ) பெற்றாலே எழுத்தராகிவிடலாம். இந்த முறை தேர்வு வினாத்தாள் ஓரளவு GDS  ஊழியர் எதிர்கொள்ளும்  வகையில் மாற்றப் பட்டுள்ளதாக   தகவல் தெரிவித்தார்கள் )

2013 க்கான RESIDUAL  VACANCIES அறிவிக்கப் படவில்லை . 

ஆக அஞ்சலக எழுத்தர் (P.O.P.A.)  அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மொத்தம்  :  641 + 265 +  254 = 1160. 

இது தவிர   C.O. P.A., RMS SA, MMS P.A., SBCO PA  என்று காலியிடங்கள் அறிவிப்பு இந்த ஆண்டு   31.12.2014 வரைக்குமான அளவில் நாம் அதிக அளவில் பெற்றுள்ளோம். இதன் மூலம் ஆட்பற்றாக்குறை  நிச்சயம் பெருமளவு குறையும் .

MTS  தேர்வு முடிவுகள்  அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது .

 P.A. DIRECT RECTT. தேர்வு முடிவுகள் தமிழகத்தை பொறுத்தவரை  ஆகஸ்ட் 2014 இறுதியில் வெளியாகலாம்.

LSG  பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப் பட்டு READY  ஆக உள்ளதாகவும் , நீதிமன்ற வழக்கின் காரணமாக  நிலுவையில்  வைக்கப்பட்டுள்ள தாகவும்  தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 11.07.2014 அன்று வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் அதில்  மனுதாரர்களுக்கான இடங்களை தீர்வு செய்வதை நிலுவையில் வைத்து இதர காலியிடங்களை நிரப்பிக் கொள்ள  உத்திரவு பெற முடியுமானால் , பட்டியல் வெளியிட முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

LGO  RESIDUAL VACANCIES  கோட்ட ரீதியிலான காலியிடங்கள் பட்டியல் கீழே பார்க்கவும் :-

LGO Residual Vacancies 2012

Name of the division/unit
UR
OBC
SC
ST
Total
Arakkonam
1
0
0
0
1
Chengalpattu
2
0
1
1
4
Kanchipuram
2
1
1
0
4
Pondicherry
5
0
0
0
5
Tambaram
5
1
2
2
10
Tiruvannamalai
2
1
0
0
3
Vellore
1
1
0
0
2
ChennaiCity Central
5
2
2
0
9
Chennai City North
4
2
1
0
7
Chennai City South
5
4
1
0
10
Anna Road HPO
3
1
0
1
5
Ch. GPO
2
1
1
0
4
Cuddalore
5
2
2
0
9
Karur
1
0
1
0
2
Kumbakonam
3
1
1
0
5
Mayiladuthurai
2
1
0
0
3
Nagapattinam
3
2
0
0
5
Pattukottai
2
0
1
0
3
Pudukottai
2
1
0
0
3
Srirangam
3
0
1
1
5
Thanjavur
3
1
1
0
5
Trichy
5
5
0
0
10
Vriddhachalam
2
1
0
0
3
Dindigul
4
0
0
0
4
Kanniyakumari
1
1
0
0
2
Karaikudi
2
0
0
0
2
Kovilpatti
2
0
0
0
2
Madurai
7
5
2
0
14
Ramanathapuram
2
1
1
0
4
Sivaganga
0
0
1
0
1
Theni
1
0
0
0
1
Tirunelveli
3
2
1
0
6
Tuticorin
3
1
1
0
5
Virudhunagar
3
0
0
0
3
Coimbatore
4
3
0
0
7
Dharmapuri
2
2
0
0
4
Erode
1
0
1
0
2
Krishnagiri
1
1
0
0
2
Namakkal
0
0
0
0
0
Nilgiris
3
2
0
0
5
Pollachi
5
2
2
0
9
Salem East
1
0
0
0
1
Salem West
4
0
0
0
4
Tirupur
2
0
0
1
3
Tiruppattur
3
3
0
0
6
Airmail Stg.
0
0
0
0
0
Chennai Stg
6
3
2
0
11
RMS ‘M’ Dn.
3
1
1
0
5
RMS ‘T’ Dn.
16
0
0
0
16
RMS ‘CB’ Dn.
8
0
2
2
12
RMS ‘MA’ Dn.
3
0
3
0
6
Total
158
55
33
8
254


Source : http://aipeup3tn.blogspot.in/