Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Saturday, 30 August 2014

31.08.2014 இன்று இலாகா பணிநிறைவு பெறும் நமது சம்மேளன பொதுசெயலர், தோழர் M .கிருஷ்ணன் அவர்களை திண்டுக்கல் கோட்ட சங்கம் வாழ்த்துகிறது


அன்பார்ந்த தோழர்களே ! 

      31.08.2014 இன்று இலாகா பணிநிறைவு பெறும் நமது சம்மேளன பொதுசெயலர், தோழர் M .கிருஷ்ணன் அவர்களை திண்டுக்கல் கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.


  

Monday, 25 August 2014

வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம்


இன்றைய காலத்தில் அலுவலகத்தில் உள்ள அதிகப்படியான வேலையால், தற்போது பெரும்பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். சரி. இப்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்காலம்.


• வேலைப்பளு அதிகமாக இருந்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட, கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.

ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.

• பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும்.

• நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்.

• மனம் அமைதி பெறுவதற்கு, உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக்யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.

• உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால், ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால், நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.

• நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.

• வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.

DINDIGUL DIVISION NFPE CONGRATULATES COM.N.S. ON HIS ELEVATION AS GENERAL SECRETARY

DINDIGUL DIVISION NFPE CONGRATULATES COM.N.S. ON HIS ELEVATION AS GENERAL SECRETARY

  AIPEU Gr.C (CHQ) - Central Working Committee Meeting - Ongole (A.P) on 22.08.2014 to 24.08.2014

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  



நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை. 

இவரது பணி  சிறக்க  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
இந்த நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

Wednesday, 13 August 2014