Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Thursday, 26 March 2015

Historic Postal Strike


  Red salute to all NFPE comrades of Our Dindigul

Division for their truthful participation in the 

Historic Postal Strike.









தமிழகம் அளவில் 26.03.2015 NFPE - COC ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி!!!

கொம்பு இருப்பதை மறந்தும்  வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல்  விளைத்த கரங்கள் 
தமதென்று அறிந்திருந்தும்  கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய் 
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் ! 
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து  எழு !  உன் துன்ப விலங்குகள் தூளாகும் ! 
--------------------------------------------------------------------------------------------------------

பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப்  பார்த்தோம்  ; SUBJECTS  கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ;  தார்ணா  இருந்தோம் ;
NOTICE  போட்டோம்  ;  போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;

தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும்  அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும்  அழைத்தும் வரவில்லை  ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய் 
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய் 
எத்தனை  எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET  தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் 
என்று  அலட்சியமாய் ஒரு கடிதம்  ;

எந்த TARGET  லும் தமிழகமே முதலிடம் ;
CBS  MIGRATION  தமிழகம்  முதலில் ;
CIS  MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM  தமிழகத்தில்தானே ?
SSA  கணக்கு  பிரதமரின் PILOT  PROJECT 
ஒரு கோடி கணக்குகள்  ஒரு மாதத்தில் வேண்டும் 
இதிலும் தமிழகம்  முதலிடம்  ;

கடந்த 23.03.2015 FINACLE  இல் எடுக்கப் பட்ட கணக்கு 
பிரதம அமைச்சரின் குஜராத்தில்  541
மேற்கு வங்கத்தில்     340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு  3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு  அலுவலகம் 
திறக்க வில்லை என்பதே  செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ? 
தோழர்கள்  சிந்திய வியர்வை எவ்வளவு   ?
எடுத்துச் சொல்ல  வார்த்தை உண்டா ?

இத்தனை செய்தும்  தொழிலாளி யின் உரிமைகள் 
மறுக்கப் படுகின்றனவே  !

தொழிலாளியின்  கோரிக்கைகள் கேட்கப் படாததால் 
உரத்துச் சொல்லவே  ஆர்ப்பாட்டம்  ! தார்ணா  !
உண்ணாவிரதம்  எல்லாம் ; அந்த  குரல் கூட 
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !

திறக்கப் படுகின்ற  ஞாயிறுகளுக்குப் பதில் 
இருக்கின்ற நாளில்  வேலை நிறுத்தம் வேண்டாம்  என்று கூறி 
பேச்சு வார்த்தை நடத்திடுவோம்  என்று  இறங்கிவர 
மனமே  இல்லை  ;  தொழிலாளி  என்ன அடிமை இயந்திரமா ?

வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ; 
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது  முடிவல்ல  ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான்  !
உரிமை கேட்டு போர்  !  உழைக்கும் தொழிலாளி யின் 
உணர்வுகள் மதிக்கப்பட  போர்  !

CORPORATE  கம்பெனி களில்  கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு  !
MODEL  EMPLOYER  ஆன மத்திய அரசுத்துறையில் 
தொடர்ந்து ஞாயிறுகளில்  வேலை நாள்  ! அப்பட்டமான  அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR  LABOUR PRACTICE  என்று  தொழிலாளர் நல 
ஆணையரே  பதிவு செய்யும் அவலம்  ;

இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம்  ?
நடத்துபவர்கள்  இந்தியர்கள் தானே  ?
அவர்களுக்கு இந்திய  அரசியல் அமைப்பு சட்டங்கள்  
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு 
அந்த மாறுதலை செய்வதற்கு  நல்ல நாள் இன்று  !

தமிழகமெங்கும்  வெற்றி  ! வெற்றி !  வேலை நிறுத்தம் வெற்றி  !
என்ற சங்கநாதம்  முழங்கப் படுகிறது  !
இந்த வேலை நிறுத்தம்  ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம்  தமிழகத்தின் ஓர்  எழுச்சி  !
ஒன்று படுவோம்  !   போராடுவோம் !


தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
தொழிற்ச்சங்க  ஒற்றுமை ஓங்குக!

Tuesday, 24 March 2015

TN NFPE COC INTENSIFYING THE ONE DAY STRIKE THROUGH OUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாது 
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் ! வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE சங்கங்களின் 
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !




Letter of Authorisation for addition of Membership

The ‘Letter of Authorisation’ prescribed for this purpose is appended herewith. If anyone requires, please download.




Wednesday, 18 March 2015

TN COC NOTICE ON ONE DAY STRIKE ON 26.03.2015




  அஞ்சல்- RMS, MMS - GDS தமிழ் மாநில
         இணைப்புக் குழு , சென்னை 600 002.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை எண்: 9                                                                       நாள் : 17.03.2015

26.03.2015 தமிழகம் தழுவிய
ஒரு நாள் வேலை நிறுத்தம்

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

        தமிழகத்தில், CORPORATE COMPANY போல செயல்படும் அஞ்சல் நிர்வாகத்தின் போக்கினை கண்டித்து, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து, தொழிற்சங்க போராட்டங்களில் கலந்து கொண்ட தோழர்களுக்கு  தென்மண்டலம், RMS, AUDIT பகுதிகளில்  தொடர்ந்து அளிக்கப்படும்  தண்டனைகள் மற்றும் பழி வாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, TARGET என்ற பெயரில் கண்மூடித்தனமான இலக்குகளை நிர்ணயித்து ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து, CBS/CIS என்ற பெயரில் குறைபாடுகளின் குப்பை மேடாக அஞ்சல் சேமிப்பு வங்கிப் பகுதி மற்றும் அஞ்சல் காப்பீட்டுப் பகுதி ஆக்கப்படுவதை எதிர்த்து - பொது மக்கள் சேவை தெரிந்தே சீரழிக்கப்படுவதைக் கண்டித்து,  நாம் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுகொள்ளாமல் தானடித்த மூப்பாக செயல்படும் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அளித்திட, பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பிறகு,   கடந்த 06.03.2015 அன்று கூடிய நம்முடைய NFPE தமிழ் மாநில இணைப்புக் குழு, தமிழக அஞ்சல் பகுதியில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளையும் கோரிக்கைகளாக ஒன்று சேர்த்து மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு அளிப்பது எனவும்,  கோரிக்கைகளை  வலியுறுத்தி எதிர்வரும்  26.03.2015 அன்று  தமிழகம் தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவதெனவும் முடிவெடுத்தது.

வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது

        இதன் அடிப்படை யில் கடந்த 10.3.2015    அன்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள  CPMG அலுவலக வளாகத்தில் NFPE இணைப்புக்குழு சார்பாக ஒரு மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, வேலை நிறுத்தத்திற்கான முறையான, சட்டபூர்வமான நோட்டீஸ் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 13.03.2015 அன்று திருச்சியில் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு போராட்ட திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும்  மாநிலச் செயலர்கள்/அகில இந்திய / சம்மேளன நிர்வாகிகள்  கலந்துகொள்ளும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தமிழகத்தின் அனைத்து கோட்ட/மற்றும் கிளைகளிலும், அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது இதற்கான சுற்றுப் பயண அறிக்கைகள் அந்தந்த சங்கங்களின் மண்டல செயலர்கள் மூலம் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

             மதுரை  மண்டலக் கூட்டம்       :     19.03.2015   மாலை   இடம் :  மதுரை  
             கோவை மண்டலக் கூட்டம்       :    20.03.2015    மாலை   இடம் :  கோவை
             திருச்சி மண்டலக் கூட்டம்        :     21.03.2015    மாலை   இடம் :  திருச்சி 
             சென்னை மண்டலக் கூட்டம்      :    23.03.2015       மாலை    இடம்:  சென்னை

எனவே ஊழியர்களை ஒன்று படுத்துங்கள்! வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை தீவிரப் படுத்துங்கள் ! வேலை நிறுத்த கூட்டங்களை சிறப்பாக நடத்துங்கள் ! வேலை நிறுத்தத்தை முழு வெற்றியாக ஆக்குங்கள் ! வேலை நிறுத்தம் வெல்லட்டும் ! கோரிக்கைகள் நிறைவேறட்டும் !

கோரிக்கைகள்
மாநில அஞ்சல் நிர்வாகமே !
·         தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே ! தொழிற்சங்கங்களை மதித்து நட !
·         தென்மண்டலம், RMS, AUDIT பகுதிகளில் எடுக்கப்பட்ட தொழிற்சங்க பழி வாங்கும் நடவடிக்கைகளை/தண்டனைகளை ரத்து செய் !
·         RPLI, RD, SB, SSA, EPOST - TARGET கொடுமைகளை உடனே நிறுத்து !
·         நீண்டகாலமாக PROVISIONAL APPT இல் உள்ள GDS ஊழியர்களை பணி நிரந்தரம் செய்!
·         CBS, CIS, CSI பிரச்சினைகளை உடனே தீர்த்துவை ! பொதுமக்கள் சேவையை சீரழிக்காதே !
·         காலாவதியான கணினி - உபகரணங்களை  உடனே மாற்று !
·         ASSESSMENT OF VACANCIES முறையாக செய்து காலி இடங்களை உடனே நிரப்பு !
·         அஞ்சல், RMS பகுதிகளில் LSG, HSG II, HSG I காலியிடங்களை உடனே நிரப்பு !
·         C.O./R.O./D.O. வில் நீண்டகாலம் DEPUTATIONஇல் உள்ள ஊழியர்களை திருப்பி அனுப்பு !
·         C.O./ R.O. RPLI/PLI  பணிகளில் உள்ள ஊழியர்களை திருப்பி அனுப்பு !
·         2005-2008 இல் குறைக்கப்பட்ட தபால்காரர், MTS பதவிகளை நீதிமன்ற ஆணைப்படி திரும்ப வழங்கு ! அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை உடனே வழங்கு !
·         CL/EL/RH விடுப்புகளில் தபால்காரர்/MTS இடங்களுக்கு பதிலி அனுமதி !
·         SORTING POSTMAN/HEAD POSTMAN களை பட்டுவாடா பணி செய்திட நிர்ப்பந்திக்காதே !
·         ஈக்காட்டுத்தாங்கல் PARCEL HUBக்கு CONCRETE கட்டிடம் கட்டும் வரை ADAM PARK கட்டிடத்திற்கே பணிகளை திரும்ப மாற்று !
·         CHECKER-CUM-CASHIER பதவிகளை அனைத்து RMS அலுவலகங்களிலும் திரும்ப வழங்கு !
·         SPCC, CHENNAI க்கு  தனியே ஆட்களை வழங்கு !
·         MMS ஊர்திகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு  இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கு !
·         தனியார் MAIL ஊர்திகளில் பணி புரியும் MAILMAN களுக்கு இருக்கை மற்றும் ஒய்வு அறை வசதிகள் செய்து கொடு !
·         எழும்பூர் PSO வில் CONCRETE கட்டிடத்தில் ஊழியர் ஓய்வறை, குளியல் மற்றும் கழிப்பறை கட்டிக் கொடு !
·         மாநில அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஊழியர்களை தரக்குறைவாக நடத்தாதே !
·         TRAINER என்ற பெயரில் OPERATIVE SIDEக்கு DEPUTE செய்யப்பட PA(CO)க்களை திரும்ப அழை !
·         DPA அலுவலக CANTEEN இல் வழங்கப்பட்ட காலை உணவை நிறுத்தாதே !
·         PART TIME/CONTINGENT/CASUAL/MAZDOOR/OS ஊழியர்களுக்கு இலாக்கா உத்திரவுப் படி 1.1.2006 முதல் ஊதிய உயர்வு உடனே வழங்கு !
·         சட்ட விரோதமாக மறுக்கப்பட்ட WEEKLY PAID OFF உடனே வழங்கு !
·         இலாக்கா உத்திரவுப்படி 1.09.1993 க்கு முன்னதான CASUAL ஊழியர்களுக்கு GDS பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கு !
·         CASUAL/MAZDOOR/CONTINGENT ஊழியருக்கும் அடையாள அட்டை வழங்கு !
மற்றும் வேலைநிறுத்த நோட்டீசில் வைக்கப்பட்ட இதர  
கோரிக்கைகளை நிறைவேற்று !

 தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும் !   
 வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

போராட்ட வாழ்த்துக்களுடன்
மாநிலச் செயலர்கள்
J. ராமமூர்த்தி , அஞ்சல் மூன்று         G. கண்ணன் , அஞ்சல் நான்கு
K. ரமேஷ் ,  RMS மூன்று               B. பரந்தாமன் , RMS                    P. நாகராஜன் , ADMIN                         B. சங்கர் ,  ACCOUNTS
M.P.P.கார்த்திகேயன் , SBCO                   R. தனராஜ் , GDS
D. சிவகுருநாதன் , CL/PT/CONTINGENT