Scrolling
SA POST
"
Wednesday, 29 July 2015
HOMAGE TO FORMER PRESIDENT A P J ABDUL KALAM
FORMER PRESIDENT A P J ABDUL KALAM PASSES AWAY. A BIG SALUTE TO THE MISSILE MAN- FUNERAL BY TOMORROW AT RAMESWARAM

Bharat
Ratna APJ Abdul Kalam Passed Away: Former Indian President Bharat Ratna
APJ Abdul Kalam (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) Passed Away
today(27.07.2015). He was reportedly collapsed on stage while giving a
lecture at the Indian Institute of Management in Shillong and
immediately rushed to hospital. Doctors say he suffered from a cardiac
arrest.
Dr Kalam was born in Rameswaram on October 15, 1931, to a boatman. He
played a pivotal role in India's Pokhran-II nuclear test in 1998, the
first since the test by India in 1974. He was known as Missile Man India
for ensuring the success of Integrated Guided Missile Development
Programme (IGMDP). For his achievements, he was awarded the Padma
Bhushan, Padma Vibhushan and Bharat Ratna, and then he became the 11th
President of India in 2002. He was THE BEST and the ONLY president of
India who inspired youth. His life itself is a motivational lesson for
the modern youth.
Tuesday, 28 July 2015
Friday, 17 July 2015
Saturday, 11 July 2015
SSC CHSL (POSTAL ASSISTANT EXAM) REFERENCE BOOKS AND PREPARATION PLAN
SSC CHSL (POSTAL ASSISTANT EXAM) REFERENCE BOOKS AND PREPARATION PLAN
This year Staff Selection Committee conducting Postal Assistant exam by Combined Higher Secondary Level (10+2) Examination, 2015 and last date for apply is 20/07/2015. ( Now extended)
Books are keys to success for any exam. Candidates should polish their basics by using best books. Candidates make big mistake while choosing books for exams. Never choose all in one book, these kind of guides doesn't concentrate on fundamentals.
For Arithmetic: (Any two books)
NCERT Math Books from 6th to 10th (gives you best base in strong fundamentals)
1.Magical book on Quicker Maths by M.Tyra
2. Quantitative Aptitude by R.S.Aggarwal
3. Numerical ability and Quantitative by P.K.Mittal
4. Quantitative aptitude by Arun Sharma
5. Quantitative aptitude by Abhijit guha
6. Quantitative aptitude by A.Gulati
புதுகை மாநகரில் அஞ்சல் மூன்றின் சீர் மிகு மாநில மாநாடு !
37TH CIRCLE CONFERENCE OF AIPEU GR.C TN DATE FIXED
புதுகை மாநகரில் அஞ்சல் மூன்றின்
சீர் மிகு மாநில மாநாடு !
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று
சங்கத்தின் 37 ஆவது தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4, 5
மற்றும் 6 தேதிகளில் புதுக்கோட்டை- திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள V .S .B
. கல்யாண மகாலில் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான முறையான அறிவிப்பு (NOTIFICATION ) மாநிலச் சங்கத்தால்
தனியே வெளியிடப்படும் . இது தோழர்./தோழியர் பயண ஏற்பாடுகள் செய்து
கொள்வதற்கான முன்னோட்டமான அறிவிப்பே !
இந்த மாநாட்டை வரவேற்புக் குழு
சார்பில் ஏற்று சிறப்பாக நடத்திட நம்முடைய மத்திய மண்டல செயலரும் ,
புதுக்கோட்டை அஞ்சல் மூன்றின் கோட்ட செயலருமான தோழர். R . குமார் அவர்கள்
பொறுப் பெடுத்துள்ளார். விரைவில் வரவேற்புக் குழு அமைத்
திடுவதற்கான கூட்டம் புதுகை நகரில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளையும் மாநிலச்
சங்கத்தின் சார்பில் செய்திட அவரே பொறுப்பேற்றுள்ளார். அவருடன் மத்திய
மண்டலத்தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளான தோழர். J . ஜானகிராமன்
(திருச்சி) மற்றும் தோழர். R .பெருமாள் (குடந்தை ) ஆகிய இருவரும் இணைப்
பொ றுப்பினை ஏற்றுள்ளனர்.
மாநாட்டு அரங்கு முழுவதும் குளிர்
சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. 1000 பேர் அமரும் வகையில் பெரிய அளவில்
சிறப்பான புதிய மண்டபமாக உள்ளது. மேலும் அங்கேயே சார்பாளர்கள் தங்கும்
வகையில் MINI HALL மற்றும் பெரிய அளவில் DINING HALL , மிகப் பெரிய
LAWN மற்றும் CAR PARKING , BUFFET HALL என்று தனித்தனியாக உள்ளது
.
தலைவர்கள் , சிறப்பு அழைப்பாளர்கள் தங்கும் வகையில் குளிரூட்டப்பட்ட 14 பெரிய அறைகள்
, அதிக அளவில் BATH , LAVATORY அறைகள் என சிறப்பாக அனைத்தும் ஒரே
இடத்தில் அமைந்துள்ளன. நகரில் இருந்து 2 கி. மீ. தொலைவில்
திருக்கோகர்ணம் பகுதியில் மண்டபம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து
வருபவர்கள் திருக்கோ கர்ணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.
புதுகை பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்களுக்கு திருச்சி, கீரனூர்
செல்லும் நகரப் பேருந்துகள் உள்ளன.
மேலும் விபரங்கள் குறித்து
வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தனியே சுற்றறிக்கை அனைத்து
கோட்ட/ கிளைச் செயலர்கள் , மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மகிளா
கமிட்டி உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் .
மாநாடு சிறக்க,
மூத்த தலைவர்கள், அனைத்து
கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , சம்மேளன , அகில
இந்திய சங்க நிர்வாகிகள் , மகிளா கமிட்டி நிர்வாகிகள் , சார்பாளர்கள் ,
பார்வையாளர்கள் மற்றும் மத்திய மண்டலத்தை சேர்ந்த அஞ்சல் நான்கு, GDS
சகோதர சங்க நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும்,
ஆலோசனைகளையும் நம் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
சிறக்கட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
சீர் பெறட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
வெல்லட்டும் நம் அஞ்சல் மூன்று மாநில மாநாடு !
மாநாட்டு வாழ்த்துக்களுடன்
J . இராமமூர்த்தி,
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , தமிழ்நாடு.
Tuesday, 7 July 2015
INFORMAL MEETING WITH THE DPS, SOUTHERN REGION ON 30.6.2015 IN C/W DINDIGUL DIVISION ISSUES
NFPE P3 DINDIGUL THANKS THE CIRCLE SECRETARY FOR TAKNG UP THE MATTER WITH R.O., MADURAI
INFORMAL MEETING WITH THE DPS, SOUTHERN REGION ON 30.6.2015
மதுரை மண்டல நெறியாளருடன் சந்திப்பு !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !கடந்த 30.06.2015 அன்று மதுரை சென்ற நம்முடைய மாநிலச் செயலர் , மதுரை மண்டல நெறியாளர் திருமதி. T. நிர்மலாதேவி அவர்களை மரியாதையை
நிமித்தம் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தோழர். திண்டுக்கல்
சுப்ரமணியன் அவர்களும் உடன் இருந்தார். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது.
சந்திப்பில் சில முக்கிய ஊழியர் பிரச்சினைகள்
குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு :-
1. திண்டுக்கல் கோட்ட சுழல் மாறுதலில்
ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக கடிதம் அளித்து தெரிவிக்கப்பட்டது.
அதன் முழு விபரங்களை கேட்டறிந்த நெறியாளர் அவர்கள் , இதில் பல
பிரச்சினைகளில் தான் உடன் படுவதாகவும் , இதுகுறித்து முது நிலை
கண்காணிப்பாளரிடம் விளக்கம் பெற்று ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
2. மதுரை மண்டல தொழிற் சங்க
பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசிய போது , ஏற்கனவே CPMG அவர்கள்
தெரிவித்தபடி , DIES NON மீது DPS அவர்களிடம் மேல்முறையீடு
செய்துள்ளவர்களில் பலருக்கு அந்த தண்டனை ரத்து செய்து உத்திரவிடப்
பட்டுள்ளதாகவும் குறிப்பாக தோழர்கள். பாலாஜி, பாலமுருகன், நாராயணன், மணி உள்ளிட்டவர்களுக்கு DIES NON ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள
மேல்முறையீடு மனுக்கள் மீது ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தார். மதுரை கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தியின்
மேல்முறையீடு உரிய அதிகாரிக்கு
செய்யவில்லை என்பதால் அவருக்கு அதன் மீது பதில் அனுப்பப்
பட்டுள்ளதாகவும் , அப்படி அவர் மேல் முறையீட்டு அதிகாரிக்கு மனுச்
செய்தால் அதன்மீதும் ஆவன நடவடிக்கை எடுத்து ரத்து செய்யப்படும் என்று
கூறினார். எனவே இதுவரை மேல்முறையீடு செய்து பதில் வராத ஊழியர்கள் , அதன்
விபரங்களை மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்.
3.மண்டல அலுவலகத்திலிருந்து
DEPUTATION இல் சென்றுள்ள ஊழியர்களை திருப்ப அனுப்பும் பிரச்சினையில் ,
CHIEF PMG உத்திரவுப்படி ஏற்கனவே 8+2+1+1 = 12 ஊழியர்கள் திருப்ப
அனுப்பப் பட்டுள்ளதாகவும் 3.7.2015 அன்று மேலும் 12 ஊழியர்களை திருப்ப
மதுரை கோட்டத்திற்கு அனுப்பிட உத்திரவிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஊழியர் பிரச்சினைகளில் தம்மிடம்
கொண்டு வரும் பிரச்சினைகளில் சட்டபூர்வமான உரிய நடவடிக்கை தாம் எடுத்து
வருவதாகவும் தெரிவித்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அணுகுமுறை
மாற்றத்திற்கு நாம் நன்றி தெரிவித்து , இலாக்காவின் முன்னேற்றத்திலும்
ஊழியர் பிரச்சினையை தீர்ப்பதிலும் நம்முடைய ஒத்துழைப்பை நாம் நிச்சயம்
அளிப்போம் என்றும் தொழில் அமைதி காக்க நம் மாநிலச் சங்கம் முன் நிற்கும்
என்றும் உறுதி அளித்தோம். PMG SR அவர்கள் CAMP சென்றிருந்த
காரணத்தினால் அவரை பார்க்க இயலவில்லை .
Subscribe to:
Posts (Atom)