Scrolling
SA POST
"
Tuesday, 26 January 2016
Monday, 25 January 2016
அஞ்சலக பணபரிமாற்ற நேரத்தை இலாகா விதிப்படி பின்பற்ற அனைத்து CPMG களுக்கும் Postal Directorate உத்தரவு --
SAVINGS BANK சம்பந்தமான பண பரிமாற்றம் 5 மணி நேரம் --சனிக்கிழமைகளில் 3 மணிநேரம் தான் .
REGD , MONEY ORDER 6 மணிநேரம் -- சனிக்கிழமைகளில் 5 மணிநேரம்
இனியாவது BUSINESS HOURS OF POST OFFICES - ஒரே மாதிரியாக அமுல்படுத்த மாநில நிர்வாகம் முன்வர வேண்டும் . இல்லையெனில் மாநிலசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Friday, 22 January 2016
Thursday, 21 January 2016
Wednesday, 20 January 2016
திண்டுக்கல் தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் தின கொண்டாட்டம் - 14/01/2016
திண்டுக்கல் தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் தின கொண்டாட்டம் - 14/01/2016

திண்டுக்கல் கோட்ட மற்றும் திண்டுக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் ஒருசேர கொண்டாடி மகிழ்ந்த திருநாள் தான் பொங்கல் திருநாள். இந்தவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு .சாந்தகுமார் மற்றும் திண்டுக்கல் தலைமை அஞ்சலக அதிகாரி அவர்களுக்கும், திரளாக கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Tuesday, 19 January 2016
வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.
வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.

திண்டுக்கல் கோட்டம் செம்பட்டி அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழர் திரு. சுகுமார் (SPM) அவர்களது தாயார் 19/01/2016 அன்று இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
அம்மையாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
கோட்ட செயலர்,
திண்டுக்கல் கோட்டம்
Tuesday, 12 January 2016
IN MEMORY OF GREAT LEADER COM. BALU - SOME OF THE PHOTOS TAKEN AT THE MEETING HELD AT ANNA ROAD HPO ON 10.01.2016
"அஞ்சா நெஞ்சன் " தோழர் பாலு அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சி !
கடந்த 10.01.2016 அன்று மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் , 'அஞ்சா நெஞ்சன்' என்று அனைவராலும் அன்போடும் பெருமதிப் போடும் அழைக்கப்படும் தோழர். பாலு என்கிற தோழர். N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி மூத்த தலைவர்களின் நினைவுப் பகிரல்களோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தோழர். பாலு அவர்களின் உருவப் படத்தினை தோழர். AGP அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்த பின் அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்திற்கு தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் அவர்கள் தலைமையேற்று சிறப்புற நிகழ்வுகளை நடத்தினார். கூட்டத்தில் முதுபெரும் அஞ்சல் தொழிற்சங்க இயக்கத் தலைவர் தோழர். AGP அவர்கள், அஞ்சல் மூன்றில் முன்னாள் பொதுச் செயலர் 'அறிவு ஜீவி' தோழர். KVS அவர்கள் , அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். முருகதாஸ் , NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபிராமன், சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர்.A . மனோகரன், சம்மேளனத்தின் உதவி மாபொதுச் செயலர் தோழர். S . ரகுபதி, அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவரும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர். J R , அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, தமிழக NFPE இணைப்புக் குழுத் தலைவர் மற்றும் R 4 மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன், இணைப்புக் குழு கன்வீனர் மற்றும் P 4 மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ், NFPE GDS சங்கத்தின் துணைப் பொதுச் செயலரும் மாநிலச் செயலருமான தோழர். R . தனராஜ், நிர்வாகப் பிரிவு சங்கத்தின் மாநிலப் பொருளர் தோழர். ரகுபதி உமாசங்கர் , அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன், அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்திய செயல் தலைவர் தோழர் . N .G ., RMS மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். K . சங்கரன் உள்ளிட்ட பல முன்னாள் /இந்நாள் நிர்வாகிகள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தோழர். பாலு அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் மாநிலமெங்கும் இருந்து நூற்றுக் கணக்கான நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.
Monday, 11 January 2016
NEPE DINDIGUL Whatsapp Group
”NEPE DINDIGUL” Whatsapp Group
NEPE DINDIGUL Whatsapp குருப்பில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பின் வேண்டுகோள் . இது முழுக்க முழுக்க தொழிற்சங்க செய்திகளை மட்டும் பகிர்ந்துகொள்ள உருவாக்கப்பட்ட ஒரு தளம் .இதில் சினிமா, அரசியல், கடி சிரிப்புகள் இவைகளை தவிர்த்து தொழிலாளி சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் பகிர்ந்துகொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
தோழமையுடன்
மைக்கேல் சகாயராஜ்
கோட்ட செயலர் - NFPE
திண்டுக்கல்
முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவாஞ்சலி --
முன்னாள் மாநில செயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவாஞ்சலி --
நாள் --10.01.2016 இடம் --சென்னை தலைமை தோழர் .P .மோகன்
மேடையில் தோழர்கள் KVS (முன்னாள் பொதுசெயலர் )J இராமமூர்த்தி .(.P 3மாநிலசெயலர்) G கண்ணன்(மாநிலசெயலர்P4) ,கண்ணையன் (R3 முன்னாள்மாநிலசெயலர் )R .மனோகரன் NFPE செயலர் , ,, உள்ளிட்டோர்
தோழர் AGPஅவர்கள் மறைந்த தோழர் பாலு அவர்களுக்கு மலர்மாலை சூட்டுகிறார் -அருகில் தோழர் வீரமணி ,திண்டுக்கல் சுப்பிரமணி ,மற்றும் JR
முன்னாள் மாநிலசெயலர் தோழர் பார்த்திபன்
தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் முன்னாள் மாநில தலைவர்
நாள் --10.01.2016 இடம் --சென்னை தலைமை தோழர் .P .மோகன்
மேடையில் தோழர்கள் KVS (முன்னாள் பொதுசெயலர் )J இராமமூர்த்தி .(.P 3மாநிலசெயலர்) G கண்ணன்(மாநிலசெயலர்P4) ,கண்ணையன் (R3 முன்னாள்மாநிலசெயலர் )R .மனோகரன் NFPE செயலர் , ,, உள்ளிட்டோர்
தோழர் AGPஅவர்கள் மறைந்த தோழர் பாலு அவர்களுக்கு மலர்மாலை சூட்டுகிறார் -அருகில் தோழர் வீரமணி ,திண்டுக்கல் சுப்பிரமணி ,மற்றும் JR
முன்னாள் மாநிலசெயலர் தோழர் பார்த்திபன்
தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் முன்னாள் மாநில தலைவர்
Subscribe to:
Posts (Atom)