Scrolling
SA POST
"
Thursday, 27 October 2016
ORDER ISSUED BY THE DEPARTMENT, CHIEF PMG, AND PMGs ON THE SAME DAY, FOR ENHANCED BONUS TO GDS TO THE CEILING OF RS. 7000/- FROMTHE YEAR 2014-15
வெற்றி ! வெற்றி !
GDS ஊழியர்களுக்கு 2014-15 முதல் இலாக்கா ஊழியர்கள் போல் ரூ.7000/- உச்சவரம்புடன் உயர்த்தப்பட்ட போனஸ் உத்திரவு இதோ !
நம்முடைய வலிமையான தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !
பொதுச் செயலர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றி !
நம்முடைய வேலை நிறுத்த தயாரிப்புகளுக்கு கிடைத்த வெற்றி !
கிடையாது , முடியாது என்றதெல்லாம் நன்மையாய் முடிந்தது !
தோற்றதில்லை தோற்றதில்லை !
தொழிற் சங்கம் தோற்றதில்லை !
தொழிற்சங்கம் தோற்றதாக வரலாறே உலகில் இல்லை !
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2016 முதல் 2 % அகவிலைப் படி
உயர்த்தி வழங்கிட காபினெட் ஒப்புதல் !
நிதி அமைச்சக உத்திரவு நாளை !
ORDERS OF ENHANCED CEILING OF BONUS @ RS 7000/- FOR GDS ISSUED BY DEPARTMENT OF POST
A great achievement of NFPE & Postal JCA (NFPE-FNPO & AIPEU-GDS - NUGDS) for Gramin Dak Sevaks
ORDERS OF ENHANCED
CEILING
OF BONUS @ RS 7000/- FOR GDS
ISSUED BY DEPARTMENT
OF POST
NFPE & Postal JCA always stand for the cause of GDS.
GDS BONUS ENHANCEMENT ORDER ISSUED
SHINING VICTORY FOR NFPE , AIPEU GDS AND POSTAL JCA INCLUDING FNPO & NUGDS .
RECOGNISED GDS UNION's GENERAL SECRETARY SHRI MAHADEVAIAH WITHDRAWN THE STRIKE DECISION EVEN BEFORE ORDERS ARE ISSUED.
NFPE
& AIPEU -GDS , POSTAL JCA INCLUDING FNPO & NUGDS SERVED TWO
DAYS STRIKE NOTICE ON 20.10.2016 AND TOOK A FIRM STAND THAT WE WILL NOT
WITHDRAW THE STRIKE DECISION TILL ORDERS ARE ISSUED .
SECRETARY , DEPARTMENT OF POSTS HELD DISCUSSION WITH US AND REQUESTED TO WITHDRAW THE STRIKE DECISION .
WE
REFUSED TO WITHDRAW . SHRI MAHADEVAIAH WITHDRAWN THE STRIKE DECISION ON
24.10.2016 ITSELF WITHOUT WAITING FOR THE DECISION OF THE FINANCE
MINISTRY AND GOVT AND RAN AWAY FROM THE BATTLEFIELD HALF WAY FEARING
WITHDRAWL OF RECOGNITION FACILITIES.
CONFEDERATION
& JCM STAFF SIDE EXTENDED FULL SUPPORT AND DISCUSSED THE CASE IN
THE JCM STANDING COMMITTEE MEETING WITH THE GOVERNMENT ON 25.10.2016..
COPY OF ORDER PUBLISHED HERE UNDER.
Yours fratennally
R.N.PARASHAR


Wednesday, 26 October 2016
TN PJCA BLACK BADGE DEMONSTRATION AT ALL WORK PLACES THROUGHOUT TAMILNADU CIRCLE - SAVINGRAM - AGAINST ORDERING OF SUNDARY/ HOLIDAY DUTY
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகம் வருகை புரிந்த பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அளித்த எழுத்து பூர்வமான ஒப்புதலை மீறி , இருக்கும் ஊழியர்களை வைத்தே எல்லா ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களிலும், பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களை பட்டுவாடா செய்திடவும் , விரைவுத் தபால்களை பட்டுவாடா செய்திடவும் இலாக்கா உத்திரவிட்டு,நாடு முழுவதும் கடந்த 23.10.2016 உடன் தொடர்ந்து ஐந்தாவது விடுமுறை தினமாக இந்த பட்டுவாடா நிகழ்வு தொடர்கிறது. இதனை தமிழக அஞ்சல் மூன்று சங்கம் தொடர்ந்து எதிர்த்து வருவது உங்களுக்குத் தெரியும். முதல் எதிர்ப்பை பதிவு செய்ததும் உங்களுக்குத் தெரியும்.
ஏற்கனவே கடந்த 13.10.2016 இல் தெளிவான கடிதத்தை நம்முடைய CPMG க்கு அளித்துப் பேசினோம் , இது இலாக்கா உத்திரவு என்று மாநில நிர்வாகம் கூறியதால் , உடன் நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலருக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றோம். அவரும் இலாகாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருப்பினும் பிரச்சினை தீரவில்லை. பன்னாட்டு கம்பெனிகளில் கூட அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சனி , ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. கூரியர் நிறுவனங்கள் கூட அமேசான், நாப்தால் பொருட்களை ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில் பட்டுவாடா செய்வதில்லை . அங்கெல்லாம் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மதிப்பளித்து வார விடுமுறை அளிக்கிறார்கள்.
ஆனால் MODEL EMPLOYER என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்படும் மத்திய அரசுத் துறையான அஞ்சல் துறை அதிகாரிகள், தன்னுடைய இலாகாவில் பணி புரியும் ஊழியர்களை கொத்தடிமையாக நினைத்து வார விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் பணிக்கு வரச்சொல்லி உத்திரவு இடுகிறார்கள். கேட்டால் ரயில்வே துறையில் 24 மணிநேர பணி செய்யவில்லையா ? அங்கெல்லாம் ஞாயிறு விடுமுறை விடப்படுகிறதா என்று விபரம் தெரியாமல் சில கீழ்மட்ட அதிகாரிகளும் கேட்கிறார்கள்.
ரயில்வேயில் பணி புரியும் ஊழியர்களின் பணித்தன்மை , அங்குள்ள ஊழியர் எண்ணிக்கை, அவர்கள் ஒரு நாள் பணி செய்தால் ஒன்று விட்டு மறுநாள் அவர்கள் பணிக்கு வந்தால் போதும் என்ற விபரமெல்லாம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
இங்கேயும், மூன்று மடங்கு ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு 24 X 7 பணிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு, பணி நியமன சட்டத்தில் 3 X 8 தன்மை உண்டு என்று சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டு ஆளெடுக்கப்பட்டால் இதனை தாராளமாக இங்கு அமல்படுத்தலாம்.
3 SHIFT களில் ஊழியர்களை பணிக்கு கொண்டு வரலாம். இதுவெல்லாம் தெரியாமல், 'சட்டிக்குள் பானையை கழுவுவது போல' இருக்கும் குறைந்த மனித சக்தியை 365 நாட்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவது முற்றிலும் மனித உரிமை மீறலாகும். அல்லது எதேச்சாதிகாரமாகும்.
இது குறித்து நமது மாநிலச் சங்கம் அளித்த கடிதத்தின் உண்மையை ஏற்றுக் கொண்ட நமது CPMG அவர்கள், MEMBER ( O ) விற்கு நேரடிக் கடிதம் எழுதி அத்துடன் பாராளுமன்ற நிலைக்கு குழுவுக்கு இலாக்கா அளித்த பதிலின் நகலையும் இணைத்து , முடிவை மறுபரிசீலனை செய்திடலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக நம்முடைய மாநிலச் செயலரிடம் PMG MM அவர்கள் இன்று தெரிவித்தார்கள்.
மேலும் இது இலாக்கா முதல்வரால் அளிக்கப்பட்ட உத்திரவு என்பதால், ஒட்டுமொத்தமாக தங்களால் இதனை ரத்து செய்திட இயலாது எனவும் , CPMG அவர்களுடன் கலந்து பேசி எதிர்வரும் தீபாவளி பண்டிகை தினங்களுக்கு மட்டும் தமிழகத்தில் இதனை ரத்து செய்திட பரிசீலிக்கிறோம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள் .
CPMG அவர்கள் கேரளா அஞ்சல் வட்ட பொறுப்பும் ஏற்றுள்ளதால் அவர் எதிர்வரும் 27.10.2016 மாலைக்கு பிறகுதான் வர இயலும் எனவும், எனவே எதிர்வரும் 28.10.16 அன்று காலை அவரை சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். மேலும் உடன் இது குறித்து பேசிட PMG ,MM மற்றும் DPS, HQ ஆகிய இருவரையும் CPMG அவர்கள் பணித்துள்ளதால், நாளை 26.10.2016 காலை 10.30 மணிக்கு PJCA பிரதிநிதிகளை அழைத்துள்ளார்கள். இதில் தீபாவளி பட்டுவாடா நிறுத்தம் குறித்து முடிவு அறிவிக்கப்படும். இதனிடையே, தென்மண்டல மற்றும் கோவை மண்டல பொறுப்பேற்றுள்ள PMG அவர்கள் தன்னுடைய மண்டலங்களில் தீபாவளி பட்டுவாடாவை நிறுத்திட உத்திரவை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு நம் நன்றி .
மேலும் இது குறித்து இன்று இரண்டுமுறை நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலருக்கு நம்முடைய மாநிலச் செயலர் தகவல்களைத் தெரிவித்து தமிழகத்தில் PJCA போராட்ட களம் அமைந்துள்ளதால் உடன் அஞ்சல் வாரிய உறுப்பினர் ( O ) அவர்களை சந்தித்து முடிவு காண வேண்டியுள்ளார். அவரும் உடன் சந்தித்து பிரச்சினையை பேசுவதாக நம்முடைய மாநிலச் செயலருக்கு உறுதி அளித்துள்ளார்.
எப்படி இருப்பினும், எந்தக் காரணம் கொண்டும் இது போன்ற கொடுமைகளை நாம் அனுமதிக்க முடியாது. எனவே நாளைய போராட்டத்தின் வீச்சு , ஊழியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு உணர்வை அஞ்சல் நிர்வாகத்திற்கு உணர்த்திட வேண்டும். அந்த வகையில் போராட்டத்தை அனைத்து பகுதிகளிலும் சிறக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
நம்முடைய கோரிக்கை எல்லாம் தீபாவளி பண்டிகைக்கானது மட்டுமல்ல. இந்த தொழிலாளர் விரோத உத்திரவு ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டியதே ஆகும்.
எனவே போராட்ட களம் புகுவீர் !
ஊழியர்களை சங்க வேறுபாடு இன்றி ஓரணியில் திரட்டுவீர் !
தொழிலாளர் உரிமை வெல்லட்டும் !
அடக்குமுறை எண்ணங்கள் நொறுங்கட்டும் !
சுதந்திர கீதம் முழங்கட்டும்!
Monday, 24 October 2016
Saturday, 22 October 2016
FIRST ANNIVERSARY ON THE DEATH OF OUR GREAT LEADER COM. N. BALU , EX- CIRCLE SECRETARY, TAMILNADU P3 CIRCLE UNION
FIRST ANNIVERSARY ON THE DEATH OF OUR GREAT LEADER COM. N. BALU , EX- CIRCLE SECRETARY, TAMILNADU P3 CIRCLE UNION
'அண்ணன்' என்று
பேரன்போடும் 'அஞ்சா நெஞ்சன்' என்று பேருவகை யோடும் அண்ணனைப் பற்றி நாம்
நினைவு கொள்ள , ஆம் ! ஓராண்டு முடிந்ததையா ! மாவீரன் இந்த மண்ணுலகை
விட்டு சென்ற பின்னே !
அண்ணனின் தம்பி மார் செயங்கொண்டார் பாடிய
'கலிங்கத்துப் பரணி' போல -
பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று"
புலம்பி அழுகின்ற நிலை காணீர் .....
"அண்ணனே நீ வருவாய் என்று காத்திருந்தோம் !
நீ வரமாட்டாய் ... வரவில்லையெனில் உன் இதயத்தை
இரவலாகத் தந்திடு அண்ணா "
என்று அண்ணனுக்கு இரங்கற்பா எழுதிய தம்பி போல கேட்கிறது எம் இதயம் ! அண்ணனே ! எம் இதய மன்னனே ! உன் இதயத்தை தந்திடு எமக்கு ! போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத இதயம் வேண்டும் எமக்கு ! தந்திடு அண்ணா ! எம் இதய மன்னா !
அண்ணனின் மறைவை ஒட்டி கடந்த ஆண்டு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தினால் வெளியிடப்பட்ட " கவிதாஞ்சலி " கீழே காண்க :-





Sunday, 16 October 2016
National Postal Week 2016 - Celebration at Dindigul HPO
National Postal Week 2016 - Celebration of PLI Day & Business Development Day on 15.10.2016 by conducting BD & PLI Customer Meet and honoring the best performers of Dindigul HPO. This meeting was headed by Shri. N. Azhagupandian, SSPOs, Dindigul Division. All Postmen staff and the staff of Dindigul HPO & DO participated in the Road Show and made the event a grand success.
Saturday, 8 October 2016
India Post Recruitment - 3281 Postal Assistant / Sorting Assistant Vacancy Notified in SSC (10+2) Examination, 2016
3281 PA / SA காலியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 7.11.16. ELIGIBILITY-12th STD. 18 முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம். EXAM FEE 100 ரூபாய் மட்டுமே.
Staff Selection Commission (SSC) has published Advertisement for Combined Higher Secondary Level (10+2) Examination, 2016. Other details like age limit, educational qualification, selection process, application fee and how to apply are given below.
Exam : Combined Higher Secondary Level (10+2) Examination, 2016
Posts : Postal Assistant/Sorting Assistant
Lower Division Clerk (LDC)
Data Entry Operator (DEO)
Court Clerks
Total No. of Posts :
Tentatively the vacancies for the post of Postal Assistant/Sorting Assistant, LDC, DEO and Court Clerks are 3281, 1321, 506 and 26 respectively.
Educational Qualification :
Must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.
Age Limit :
18-27 years as on 01.01.2017 (Candidates born not before 02-01-1990 and not later than 01-01-1999).
Application Fees :
Mode of payment of fee payable Rs. 100/-(Rupees One Hundred only). Candidates may note that online application will be accepted at http://ssconline.nic.in only. Fee paid in respect of online application through SBI Challan/Net banking and any credit and debit cards will be accepted.
Scheme of Examination :
The examination will consist of a Computer-based Written Examination (Tier-I), Descriptive Paper (Tier-II) and Typing Test/Skill Test (Tier-III) Examination for the post of Data Entry Operator, Postal Assistant & Sorting Assistant (PA/SA), Lower Division Clerk and Court Clerk.
How to Apply :
Interested Candidates may Apply Online Through official Website.
ADVERTISEMENT : CLICK HERE
APPLICATION FORM : CLICK HERE
APPLY ON LINE : CLICK HERE
Last Date to Apply Online : 07-11-2016
Date of Computer Based Examination (Tier-I): 07-01-2017 , 05-02-2017
Date of Tier-II (Descriptive Paper): 09-04-2017
Wednesday, 5 October 2016
Subscribe to:
Posts (Atom)