Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Wednesday, 29 November 2017

திரு K. சுப்ரமணியன், NFPE P3 தென் மண்டல செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்





    25.11.2017 முதல் 27.11.2017 வரை செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் நமது திண்டுக்கல் கோட்டம், கலெக்ட்ரேட் அஞ்சலக உதவி அஞ்சல் அலுவலர் திரு K. சுப்ரமணியன் அவர்கள் தென் மண்டல செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்

 திரு K. சுப்ரமணியன் அவர்களின் பணிசிறப்படைய புரட்சிகரமான வாழ்த்துக்களையும், நமது நல்லாதரவையும் தெரிவிப்போம்.


P. மைக்கேல் சகாயராஜ்
கோட்டச் செயலர்
NFPE, திண்டுக்கல் கோட்டம்

Monday, 30 October 2017

Sri, E. Murugadas ( Rtd PS to SSRM, Madurai ) son's marriage reception on 29.10.2017 at Dindigul

Sri, E. Murugadas ( Rtd PS to SSRM, Madurai ) son's marriage reception on 29.10.2017 at Dindigul.

Congratulation to young couples



 

Tuesday, 22 August 2017

23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை முழு வெற்றி பெற முனைப்புடன் செயல்படுவீர் .

அன்பார்ந்த தோழர்களே !
நமது சம்மேளனம் விடுத்திருக்கும் 23.08.2017 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம். அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள் வேலைநிறுத்தத்தை முழு வெற்றி பெற முனைப்புடன் செயல்படுவீர் .



Tuesday, 4 July 2017

தென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களுடன் ஒரு சந்திப்பு --மாநிலச்சங்கத்திற்கு நன்றி ! நன்றி


 
 
தென்மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற இயக்குனர் திரு .பவன்குமார் சிங் IPS அவர்களை நேற்று 03.07.2017 அன்று மதுரையில் தோழர்கள்  மதுரை கோட்ட செயலர்    சுந்தரமூர்த்தி ,திண்டுக்கல் கோட்டசெயலர் மைக்கேல் சகாயராஜ் கன்னியாகுமரி கோட்டசெயலர் சுரேஷ் குமார்  உள்ளிட்ட தோழர்கள் மரியாதை நிமித்தமாக  சந்தித்து வாழ்த்துக்களையும் நமது எதிர்பார்ப்புகளையும் தெரிவித்தோம் ..இதற்கு எங்களுக்கு அனுமதி அளித்து ஊக்கப்படுத்திய மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கும் எங்கள் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறோம் .நமது கருத்துக்களை மிகவும் பொறுமையுடனும் பெருந்தன்மையுடனும் கேட்டுக்கொண்ட இயக்குனர் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் இனி தொடராது குறிப்பாக ஒழுங்கு நடவடிக்கைகளில் ரிவியூ மற்றும் தண்டனைகளை உயர்த்துவது என்பதெல்லாம் இருக்காது  ஒரு இணக்கமான சூழலில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று மிக நம்பிக்கையான வார்த்தைகளை சொன்னது எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது .கடந்த காலங்களில் சிறு சிறு CLERICAL ERROR கும் வழங்கப்பட்ட தண்டனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை --RULE 16 யை அவர்களே RULE 14 ஆக மாற்றிய கொடுமை இவைகளையெல்லாம் மிக தெளிவாக இயக்குனர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் .நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு  மனிதாபிமானமிக்க ஒரு இயக்குனரை தென்மண்டலம் பெற்றிருக்கிறது .அவர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்புகளை நல்கி ஊழியர்களின் பாதிப்புகளை களைய மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதல்களோடு நம்பிக்கையோடு பணியாற்றுவோம் .
                                       PMG அவர்களுடன் சந்திப்பு 
முன்னதாக நமது மாநில சங்க வழிகாட்டுதலின் படி நமது PMG அவர்களை முன்னனுமதி பெற்று சந்தித்து தென்மண்டல பிரச்சினைகளை குறித்து விவாதித்தோம் .முதலாவதாக தென்மண்டலத்தில் கேடர் சீரமைப்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான இடமாறுதல்களில் மாற்றங்கள் குறித்து விவாதித்தோம் .நிட்சயமாக CLEARVACANT உள்ள இடங்களை சுட்டிக்காட்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்கள் (கேடர் இடமாறுதலில் மேல்முறையிடு செய்தவர்கள் யாரும் புதிய இடங்களில் கோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தினாலும்JOIN பண்ண வேண்டாம் )மேலும் நமது மண்டலத்திற்குள்ளான RULE 38 இடமாறுதல் --TEMPORARY இடமாறுதல் குறித்தும் பேசினோம் .இனிமேல் RULE 38 இடமாறுதல் பதிவுகள் வெளிப்படையாக இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களது WAITING LIST என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வெளிப்படையான தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .PMG அவர்களுடனான சந்திப்பும் மிக பயனுள்ளதாக இருந்தது .
                                     மதுரை பயிற்சி மையமும் பொலிவு பெறுகிறது 
நமது இயக்குனர் அவர்கள்தான் மதுரை PTC கும் பொறுப்பு இயக்குனர் என்பது நமது ஊழியர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி .இனி மனஉளைச்சல்கள் இன்றி ஊழியர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லலாம் காரை கும்பிடனும் யாரை கும்பிடனும் என்ற குழப்பங்கள் இருக்காது .
                          மாநிலச்சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் 
கடந்த 7 ஆண்டுகளில் தென்மண்டலத்தில் நடந்த பழிவாங்கல்களை நிவிர்த்தி செய்யும் ஒரு நல்ல தருணம் கிடைத்திருக்கிறது .இனிமேல் எந்த கோட்ட அதிகாரிகளும் மேலிடத்து உத்தரவு என்று ஊழியர்களை சிரமப்படுத்த முடியாது .ஆகவே தேங்கிக்கிடக்கும் தென்மண்டல பிரச்சினைகளை சேகரித்து மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்மண்டல ஊழியர்களுக்கு நமது பேரியக்கத்தின் மீது புது நம்பிக்கை ஏற்பட மாநில சங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த தென்மண்டல கோட்ட /கிளை செயலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..முதலில் திருநெல்வேலி பிரச்சினைகளை பேசமட்டும் தான் அனுமதி பெற்றிருந்தாலும் மாநில செயலர் தோழர் JR அவர்களின் முழு முயற்சியால் அநேக கோட்ட பிரச்சினைகளை சேர்த்து  பேசிட எங்களுக்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய தோழர் அருமைத்தலைவர் KVS அவர்களுக்கும் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Monday, 19 June 2017

தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை

      தலைவர் NCA பேரவை --NCA எழுச்சி பேரவை இணைப்பு விழா 18.06.2017 அன்று ஸ்ரீரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . சுமார் 400கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர் --55 தோழர்கள் உறையாற்றினார்கள் .இந்த இணைப்பின் மூலம் NFPE தமிழக அஞ்சல் மூன்று மட்டுமல்ல NFPE என்ற பேரியக்கம் தமிழகத்தில் தனி பெரும் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை .முன்னதாக அண்ணன் பாலு அவர்களின் காலம் தொட்டு பணியாற்றி வந்த அத்தனை மூத்த தோழர்களும்  மேடையில் கவுரவிக்க பட்டனர் .தலைவர் NCA அண்ணன் பாலு ,VS அவர்களின் நினைவஞ்சலி மற்றும் மறைந்த அஞ்சல் மூன்றின் தென்மண்டல செயலர் தோழர் ஜோதிகுமார் அவர்களின் அஞ்சலியோடு கூட்டம்  தொடங்கி தொய்வில்லாமல் மாலை 3 மணி வரை நடைபெற்றது . விரிவானஅறிக்கை பேரவை சார்பாக வெளிவரும் .

பேரவையின் புதிய நிர்வாகிகள்
 
தலைவர் தோழர் KVS
 
செயல் தலைவர் தோழர் எபனேசர் காந்தி
 
இணை செயலர்கள் தோழர் J.ராமமூர்த்தி --SK .ஜேக்கப் ராஜ்
 
மண்டல செயலர்கள்  தோழர் S சுந்தர மூர்த்தி (SR )
                                  தோழர் A .வீரமணி (CCR )
                                  தோழர் N சுப்ரமணியன் (WR )
                                  தோழர் A .மனோகாரன்(CR )
பொருளாளர்             தோழர் S.வீரன்
உதவி பொருளாளர்  தோழர் S.அய்யம் பெருமாள்
அமைப்பு செயலர்கள் தோழர் V.பார்த்திபன் (CCR )
                                    தோழர் திண்டுக்கல் சுப்ரமணியன் (SR )
                                     தோழர் புகழேந்தி (WR )
                                     தோழர் R.குமார் (CR )
இணைப்புவிழாவை மிக குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்த ஸ்ரீரங்கம் கோட்ட தோழர்களுக்கும் குறிப்பாக தோழர்கள் தமிழ்செல்வன் கோட்ட செயலர் தோழர் சசிகுமார் மாநில அமைப்பு செயலர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .






Thursday, 1 June 2017

அன்பிற்கினிய நண்பரும், அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான திண்டுக்கல் தோழர். E. முருகதாஸ் அவர்கள் பணி ஓய்வு

31/05/2017 அன்று பணி ஓய்வுபெற்ற அன்பிற்கினிய நண்பரும், அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான திண்டுக்கல் தோழர். E. முருகதாஸ் அவர்கள் பல்லாண்டு காலம் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்திட வேண்டுகிறோம்.

அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்பாகவும், நலமுடனும், மன நிறைவுடனும் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


 
 






















Tuesday, 23 May 2017

23rd MAY 2017 MASS DHARNA IN FRONT OF FINANCE MINISTER’S OFFICE A RESOUNDING SUCCESS

23rd MAY 2017

MASS DHARNA IN FRONT OF FINANCE MINISTER’S OFFICE A RESOUNDING SUCCESS

ABOUT 3000 CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS RALLIED IN FRONT OF NORTH BLOCK, THE CENTRE OF GOVERNANCE OF GOVERNMENT OF INDIA

AN OUTBURST OF PROTEST, ANGER, RESENTMENT AND DISCONTENTMENT AGAINST THE BETRAYAL OF NDA GOVERNMENT

The mass dharna organized in front of Union Finance Minister’s office at North Block, New Delhi was a thundering success. Inspite of repeated intervention of the police authorities and also denial of police permission in the last minute, employees and pensioners poured in thousands from all parts of the country and defeated the attempt of the authorities to prevent the Confederation from conducting the dharna at the declared venue, North Block, the centre of governance of Govt. of India. About 3000 employees and pensioners participated. As South Block and North Block are highly protected security zone in Delhi, during the last more than 15 years, no agitational programme could be organized near South/North Block. The dharna participants included employees from various affiliates of Confederation, Central Government Pensioners Associations, Autonomous body employees and pensioners. As a mark of solidarity and support of Central Secretariat employees, the leaders of Central Secretaries Employees Associations also participated in the mass dharna. The demands raised in the 21 point charter of demands of Confederation submitted to Government during the 16th May 2017 strike was highlighted. The demands included honour assurance given by the Group of Minister’s on 30.06.2016 to NJCA leaders, Increase minimum wage and fitment formula, grant revised allowances including HRA and Transport Allowance from 01.01.2016, Implement option-I parity recommended by 7th Pay Commission for pre-2016 pensioners, Implement positive recommendations of Kamalesh Chandra Committee Report on GDS and grant Civil Servant Status to Gramin Dak Sevaks, Regularise casual, Part-time, contingent, daily-rated and contract workers and grant equal pay for equal work, withdraw stringent conditions imposed on MACP promotions, Scrap PFRDA Act and withdraw NPS, stop outsourcing, Fill up all vacant posts, remove 5% condition on compassionate appointments, upgradation of pay scale of LDC/UDC, parity in pay to stenographers, Assistants, Ministerial staff in subordinate offices and in all organized accounts cadres with that of Central Secretariat staff etc.

The mass dharna programme was presided by Com. K. K. N. Kutty, National President, Confederation. Coms: M. Krishnan, Secretary General, Confederation, R. N. Parashar, Secretary General, NFPE, Asok Kumar Kanojia, President, ITEF, Tapas Bose, President, Audit & Accounts Associations, R. Seethalkshmi, Convenor, Women’s Sub Committee, M. K. Kaushik, Ghanashyam, Central Secretariat Employees Association, Worlikar, National Federation of Atomic Energy Employees, Srikrishna Sharma, Central Government Pensioners Association, Rajasthan, Jaipur, Giriraj Singh, President, NFPE & COC Delhi addressed the huge gathering. Com. Vrigu Bhattacharjee, Secretary General, Civil Accounts Employees Association & General Secretary, COC Delhi welcomed the dharna participants and Com. Geetha Bhattacharjee, National Secretariat member, offered vote of thanks. The mass dharna commenced at 11 AM and concluded at 2.30 PM. Slogans condemning the betrayal of the Group of Ministers were shouted.

The successful mass dharna once again proved that it is Confederation and Confederation alone is dare enough to fight against the betrayal of the NDA Government and also against all injustices meted out to the Central Government employees and Pensioners. The unprecedented success of the 16th March 2017 one day strike and the 23rd May 2017 mass dharna programme is a clear message to the Government that Confederation shall not rest, till the genuine and justified demands of the Central Government employees and Pensioners are settled.

Let us march forward to our next programme i.e; HUMAN CHAIN of Central Government Employees and Pensioners in all major cities in front of all important offices on 22nd June 2017.

Yours faithfully,


(M. Krishnan)
Secretary General
Confederation
Mob & Whastapp: 09447068125
E-mail: mkrishnan6854@gmail.com


SOME SELECTED PHOTOS OF THE 23rd MAY 2017 MASS DHARNA IN FRONT OF FINANCE MINISTER'S OFFICE EXHIBITED BELOW:





























0 comments