Scrolling

NFPE - DINDIGUL DIVISION - WELCOMES YOU

SA POST

"

Monday, 19 June 2017

தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை

      தலைவர் NCA பேரவை --NCA எழுச்சி பேரவை இணைப்பு விழா 18.06.2017 அன்று ஸ்ரீரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . சுமார் 400கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர் --55 தோழர்கள் உறையாற்றினார்கள் .இந்த இணைப்பின் மூலம் NFPE தமிழக அஞ்சல் மூன்று மட்டுமல்ல NFPE என்ற பேரியக்கம் தமிழகத்தில் தனி பெரும் சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை .முன்னதாக அண்ணன் பாலு அவர்களின் காலம் தொட்டு பணியாற்றி வந்த அத்தனை மூத்த தோழர்களும்  மேடையில் கவுரவிக்க பட்டனர் .தலைவர் NCA அண்ணன் பாலு ,VS அவர்களின் நினைவஞ்சலி மற்றும் மறைந்த அஞ்சல் மூன்றின் தென்மண்டல செயலர் தோழர் ஜோதிகுமார் அவர்களின் அஞ்சலியோடு கூட்டம்  தொடங்கி தொய்வில்லாமல் மாலை 3 மணி வரை நடைபெற்றது . விரிவானஅறிக்கை பேரவை சார்பாக வெளிவரும் .

பேரவையின் புதிய நிர்வாகிகள்
 
தலைவர் தோழர் KVS
 
செயல் தலைவர் தோழர் எபனேசர் காந்தி
 
இணை செயலர்கள் தோழர் J.ராமமூர்த்தி --SK .ஜேக்கப் ராஜ்
 
மண்டல செயலர்கள்  தோழர் S சுந்தர மூர்த்தி (SR )
                                  தோழர் A .வீரமணி (CCR )
                                  தோழர் N சுப்ரமணியன் (WR )
                                  தோழர் A .மனோகாரன்(CR )
பொருளாளர்             தோழர் S.வீரன்
உதவி பொருளாளர்  தோழர் S.அய்யம் பெருமாள்
அமைப்பு செயலர்கள் தோழர் V.பார்த்திபன் (CCR )
                                    தோழர் திண்டுக்கல் சுப்ரமணியன் (SR )
                                     தோழர் புகழேந்தி (WR )
                                     தோழர் R.குமார் (CR )
இணைப்புவிழாவை மிக குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்த ஸ்ரீரங்கம் கோட்ட தோழர்களுக்கும் குறிப்பாக தோழர்கள் தமிழ்செல்வன் கோட்ட செயலர் தோழர் சசிகுமார் மாநில அமைப்பு செயலர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .






Thursday, 1 June 2017

அன்பிற்கினிய நண்பரும், அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான திண்டுக்கல் தோழர். E. முருகதாஸ் அவர்கள் பணி ஓய்வு

31/05/2017 அன்று பணி ஓய்வுபெற்ற அன்பிற்கினிய நண்பரும், அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான திண்டுக்கல் தோழர். E. முருகதாஸ் அவர்கள் பல்லாண்டு காலம் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்திட வேண்டுகிறோம்.

அவர்களின் பணி ஓய்வு காலங்கள் சிறப்பாகவும், நலமுடனும், மன நிறைவுடனும் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.